Tuesday, January 25, 2011

தூ‌த்து‌க்குடி - இல‌ங்கை‌க்கு ‌பி‌ப்ரவ‌‌ரி இறு‌தி‌யி‌ல் க‌ப்ப‌ல் சேவை: ‌ஜி.கே.வாச‌ன்

தூ‌த்து‌க்குடி - இல‌ங்கை இடையே ‌அடு‌த்த மாத‌ம் இறு‌தி‌‌யி‌ல் க‌ப்ப‌ல் போ‌க்குவர‌த்து தொட‌ங்க‌ப்படு‌ம் எ‌‌ன்று ம‌த்‌‌திய க‌ப்ப‌ல் போ‌க்குவர‌த்து‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌ஜி.கே.வாச‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

தூ‌த்து‌க்குடி துறைமுக‌த்த‌ி‌‌ல் பய‌ணிக‌ள் முனைய‌த்தை ‌‌திற‌ந்துவை‌த்த ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌‌ம் பே‌சிய அவ‌ர், பெ‌ரிய க‌‌ப்ப‌ல்களை கையாளு‌ம் வகை‌யி‌ல் 538 கோடி ரூபா‌ய் செல‌வி‌ல் கடலை ஆழ‌ப்படு‌த்து‌ம் ப‌ணிக‌ள் நடைபெ‌ற்று வரு‌கிறது எ‌ன்று‌ம் அடு‌த்த ஆ‌ண்டு அத‌ற்கான ‌தி‌ட்ட‌ப்ப‌ணிக‌ள் முடிவடையு‌ம் எ‌ன்றா‌ர்.

இ‌ந்‌திய துறைமுக‌ங்க‌ளி‌‌ல் சர‌க்குகளை கையாளு‌ம் ‌திறனை 3,200 ‌மி‌ல்‌லிய‌ன் ட‌ன்னாக அ‌திக‌ரி‌க்க நடவடி‌க்கை எடு‌க்க‌ப்ப‌‌ட்டு‌ள்ளதாகவு‌ம் ‌‌ஜி.கே.வாச‌ன் கூ‌றினா‌ர்.

முத‌ல் க‌ட்டமாக தூ‌த்து‌க்குடி - இல‌ங்கை இடையே பய‌ணிக‌ள் க‌ப்ப‌ல் போ‌க்குவர‌த்து வா‌ர‌த்‌தி‌ற்கு 3 முறை நா‌ட்க‌ள் இய‌க்க‌ப்ப‌டு‌ம் எ‌ன்று‌ம் ‌பி‌ன்ன‌ர் படி‌ப்படியாக ‌தினச‌ரி க‌ப்ப‌ல் சேவை நடைபெறு‌ம் எ‌‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இ‌ச்சேவையை தொட‌ர்‌ந்து மால‌த்‌‌தீவு, ல‌ட்ச‌த்‌தீவு‌க்கு பய‌ணிக‌ள் க‌ப்ப‌ல் சேவை தொட‌ங்க நடவடி‌க்கை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு வருவதாகவு‌ம் ‌ஜி.கே.வாச‌ன் த‌ெ‌ரி‌வி‌த்தா‌ர்.

No comments:

Post a Comment