Friday, January 14, 2011

உணவு பொரு‌ள் பதுக்கல்காரர்களு‌க்கு மத்திய அரசு எ‌ச்ச‌ரி‌க்கை

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், பதுக்கல்காரர்கள், கள்ளச்சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எ‌ன்று ம‌த்‌திய அரசு எ‌ச்ச‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு பொரு‌‌‌‌ட்களை பது‌க்‌கி வை‌க்கு‌ம் கட‌த்த‌ல்கார‌ர்க‌ள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதன்மூலம், சந்தைக்கு பொருட்கள் உரிய நேரத்தில் வருவதுடன், விலையும் குறையும் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இந்த நடவடிக்கையை மாநில அரசுகளும் மேற்கொள்ள வேண்டும் எ‌‌ன்று‌ம் ம‌த்‌திய அரசு கே‌ட்டு‌‌க் கொ‌ண்டு‌ள்ளது.

சமையல் எண்ணெய், பருப்பு, பாசுமதி அல்லாத அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்கான தடை நீடிக்கும் எ‌ன்று‌ம் ம‌த்‌திய அரச தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கொள்முதலை தீவிரப்படுத்தி, அவற்றை ‌நியாய‌விலை கடைகள் மூலம் வழங்குமாறு பொதுத்துறை நிறுவனங்களை கேட்டுக் கொள்வோம் எ‌ன்று‌ம் மானிய விலையில் சமையல் எண்ணெய், பருப்பு விற்பனை தொடரும் என்று‌ம் அ‌றி‌க்கை‌யி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

No comments:

Post a Comment