Monday, January 17, 2011

முன்னாள் லோக்சபா சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகன் சுட்டுக் கொலை

டெல்லி: முன்னாள் லோக்சபா சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் மகனும், பிரபலமான கூட்டுறவியலாளருமான சுரிந்தர் குமார் ஜாக்கர் இன்று பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இஃப்கோ என்று அழைக்கப்படும் இந்திய விவசாய உரக கூட்டுறவுக் கழகத்தின் தலைவராக இருந்து வந்தார் சுரிந்தர். இன்று பிற்பகலில் அவர் பஞ்சாப் மாநிலம் அபோஹரில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இடம், பஞ்சாப், ராஜஸ்தான் எல்லையில் உள்ள நகரமாகும்.

அடையாளம் தெரியா சிலரால் ஜாக்கர் சுடப்பட்டார். அவரை சுட்டுக் கொன்றது ஏன் என்பது குறித்துத் தெரியவில்லை.

கடந்த 30 வருடங்களாக நாட்டின் பல்வேறு கூட்டுறவு கழகங்களுடன் இணைந்து பணியாற்றி வந்தவர் சுரிந்தர். விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சியில் கணிசமான பங்காற்றியவர். பஞ்சாப் மாநிலத்தில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சிக்காக தீவிரமாக பாடுபட்டுள்ளார்.

உலகஅளவில் உள்ள கூட்டுறவுக் கழகங்களை ஒருங்கிணைக்கும் பணியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

No comments:

Post a Comment