Friday, January 14, 2011

சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்-கருணாநிதி அறிவிப்பு

சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர்-கருணாநிதி அறிவிப்பு

சென்னை: இன்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அந்த கோரிக்கையை முதல்வர் கருணாநிதி நிறைவேற்றிவிட்டார்.

இன்று தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் கூறியதாவது,

இன்று தமிழ்நாட்டில் உள்ள 76 பிற்படுத்தப்பட்ட இன மக்கள் ஆதிதிராவிடர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அவர்களை பட்டியல் இனத்தவர் என்று அழைக்குமாறு கோரிக்கை வந்துள்ளது. அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி இறந்தபோது அவரது உடல் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் தான் வைக்கப்பட்டிருந்தது. அதனால் சென்னை அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தியின் பெயர் வைக்குமாறு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

அதற்கு முதல்வர் கருணாநிதி கூறியதாவது,

பீட்டர் அல்போன்ஸ் 2 கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். அதில் ஆதிதிராவிடர்களை எப்படி அழைப்பது என்பது குறித்து முடிவெடுக்க ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து நான் ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். ஆதிதிராவிடர்களை பட்டியல் இனத்தவர் என்று அழைப்பதா அல்லது அவர்கள் வகுப்பைக் குறித்தும் சொல்லிவிட்டு பட்டியல் இனத்தவர் என்று அழைப்பதா என்பது தான் இப்பொழுது உள்ள பிரச்சனை. இது குறித்து நான் என் நண்பர்களோடு கலந்து பேசினேன். நான் என்ன கருதுகிறேன் என்றால் இனி ஆதிதிராவிடர்கள் என்றோ, தலித் என்றோ அழைக்காமல், பட்டியல் இனத்து மக்கள் என்று அழைத்துவிட்டு, அவர்களுடைய வகுப்பை, அவர்கள் ஆதிதிராவிடரா? அல்லது அருந்ததியரா? என்பதை அடைப்புக்குறிக்குள்ளே போட்டுவிட்டு - அதாவது பிராக்கெட்-ல் போட்டுவிட்டு, அவர்களைப் பட்டியல் இன மக்கள் என அழைக்கலாம் என்ற ஒரு கருத்தை நாங்கள் ஏற்கெனவே அமைத்திருக்கின்ற குழுவிடத்தில் கருத்து தெரிவித்துள்ளோம்.

அந்த குழு தன்னுடைய அறிக்கையை விரைவில் வெளியிடும். அது அந்த மக்கள் மனம் மகிழும் வகையில் இருக்கும் என்று நினைக்கிறேன். சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு நிச்சயமாக ராஜீவ் காந்தி பெயர் வைக்கப்படும் என்று நான் இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

காங்கிரஸ் சார்பில் தான் வைத்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்றியதற்கு பீட்டர் அல்போன்ஸ் நன்றி தெரிவித்தார்.

தங்கபாலு வரவேற்பு:

சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் பெயர் வைக்க வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்துள்ள முதல்வர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிககையில் கூறியிருப்பதாவது,

இன்று சட்டப்பேரவையில் காங்கிரஸின் நீண்ட நாள் கோரிக்கையான சென்னை மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெய்ர வைக்க வேண்டும் என்பதை நிறைவேற்றுமாறு கொறடா பீட்டர் அல்போன்ஸ கேட்டுக் கொண்டார்.

உடனே கருணாநிதி சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயர் நிச்சயமாக வைக்கப்படும் என்றார். இதற்காக நான் காங்கிரஸ் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment