Friday, January 14, 2011

‌பிரபாகரனை தடு‌த்தவ‌ர் வைகோ: அ‌ன்பரசு கு‌ற்ற‌ச்சா‌ற்று

இறுதிகட்டப் போரில் ஆயுதங்களை கைவிட்டு, இலங்கை, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த பிரபாகரனை தடுத்தவர் வைகோதான் எ‌ன்று‌ காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் அன்பரசு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக வைகோ தயாரித்துள்ள குறுந்தகடுகளை கைப்பற்ற வேண்டும் எ‌ன்று‌ அவ‌ர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையி‌ன் மூல‌ம் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நேரத்தில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் வைகோவை கைது செய்ய வேண்டும் எ‌ன்று‌ம் தேர்தல் ஆணையம் அவரது கட்சியை தடை செய்ய வேண்டும் எ‌ன்று‌ம் அவ‌ர் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இலங்கைத் தமிழர்களுக்கு காங்கிரஸ் கட்சி துரோகம் செய்துவிட்டது என்று வைகோ கூறிவருவதை வன்மையாக கண்டி‌த்து‌ள்ள அ‌ன்பரசு, வைகோவின் ஆலோசனையால் தான் பிரபாகரன் சர்வாதிகாரியாக செயல்பட்டார் எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

இறுதிகட்டப் போரில் ஆயுதங்களை கைவிட்டு, இலங்கை, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்த பிரபாகரனை தடுத்தவர் வைகோதான் எ‌ன்று‌ம் அ‌ன்பரசு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

No comments:

Post a Comment