Friday, January 14, 2011

கம்யூனிஸ்ட் ஆட்சியை வீழ்த்துமா மம்தா-காங்கிரஸ் கூட்டணி?


மேற்குவங்கத்தில் நீண்ட காலமாக ஆட்சியில் இருக்கும் இடதுசாரிகள் கூட்டணி அரசை எப்படியாவது ஆட்சி கட்டிலிலிருந்து இறக்கிவிட வேண்டுமென்று திரிணாமூல் காங்கிரஸ் தலைவரும், ரயில்வே அமைச்சருமான மம்தா பானர்ஜி இந்த படு தீவிரமாக களமிறங்கியுள்ளார்.

மம்தாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசு மூலம் புத்ததேவ் ஆட்சிக்கு குடைச்சல் கொடுக்கத் தொடங்கியிருப்பதால், மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கைந்து மாதங்கள் உள்ளபோதிலும், அரசியல் களம் அங்கு சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.

அநேகமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி கூட்டணி அரசு, இந்த பதவி காலத்தில் சந்தித்த சோதனைகள் மற்றும் நெருக்கடிகளைப் போன்று முந்தைய பதவி காலத்தில் சந்தித்திருக்காது என்றே கூறலாம்.





2006 ல் தொடர்ந்து 7 ஆவது முறையாக ஆட்சியை பிடித்து சாதித்தது இடதுசாரி கூட்டணி.ஆனால் ஆட்சிக்கு வந்த இரண்டாமாண்டு முதலே சோதனைகள் தொடங்கின.சிங்கூரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், நானோ கார் தொழிற்சாலை அமைக்க விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்ப, புத்ததேவ் அரசு பெரும் நெருக்கடியை சந்திக்க நேர்ந்தது.

விவசாயிகளுக்கு ஆதரவாக மம்தாவும் தனது கட்சியுடன் களமிறங்க, அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட களேபரத்தால் டாடா நிறுவனம் தனது தொழிற்சாலையை மூட்டைக் கட்டிக்கொண்டு குஜராத்தை நோக்கி ஓடியது.
1

No comments:

Post a Comment