Wednesday, July 18, 2012

தக்க சமயத்தில் காங்கிரஸ் தலைவர் ஆவார் ராகுல்: திக்விஜய்சிங் பேட்டி

காங்கிரஸ் கட்சியின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என அக்கட்சியில் பேசப்பட்டு வரும் நிலையில், கட்சியின் தலைவராக அவர் உரிய நேரத்தில் பதவி ஏற்பார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் கூறியுள்ளார். 

2014ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்ப்பாளராக நிறுத்தப்படுவார் என்று கட்சியில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. 

அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என முன்னிலைப்படுத்தி பேசப்பட்டு வருவது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உதவுமா திக்விஜய் சிங்கிடம் நிருபர்கள் கேட்டனர். 

இதற்குப் பதிலளித்த திக்விஜய் சிங்,  ‘சரியான நேரத்தில் கட்சியின் தலைமை ஏற்கவும், சிறப்பாக செயல்படவும் தகுதியும் திறமையும் உள்ளவர் ராகுல் காந்தி என முழுமையாக நான் நம்புகிறேன். ஆனால் இவ்விசயம் குறித்து கட்சியின் தலைவர்தான் முடிவெடுக்கவேண்டும். அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. 

2014 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது சோனியா காந்தியே தலைமை ஏற்று செயல்படுவார். எங்கள் குழுவில் செயல்பட்டு வரும் ஒரு முக்கிய நபராக ராகுல் காந்தி உள்ளார். அடுத்த தலைவர் ஆவதில் சந்தேகம் இல்லை. 

அவர் தலைவராக பதவியேற்பது மட்டுமல்ல, அதற்கும் மேல் இன்னும் அதிகம் செயல்பட வேண்டும். கட்சியில் மாணவ மற்றும் இளைஞர் காங்கிரசில் செயல்பட்டு வரும் அவர், காங்கிரசில் முக்கிய பொறுப்புக்கு வரவேண்டும் என்பது பெரும்பான்மையோரின் விருப்பம்’ என்று கூறினார்.

No comments:

Post a Comment