Saturday, July 28, 2012

17 வது வட்ட காங்கிரஸ் தலைவர் மூர்த்தி குழந்தை விசால் முதல் வருட பிறந்த நாள் விழா

17 வது  வட்ட காங்கிரஸ் தலைவர்  மூர்த்தி குழந்தை  விசால்  முதல் வருட பிறந்த நாள் விழா "

Monday, July 23, 2012

இந்தியாவின் 13-வது குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி

இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக தேந்தெடுக்கப்பட்ட பிரணாப் முகர்ஜி வரும் 25-ம் திகதி புதன்கிழமை பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.
ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியி்ட்ட பிரணாப் முகர்ஜி 69 சத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிரணியின் ஆதரவு பெற்ற முன்னாள் மக்களவைத் தலைவர் பி.ஏ. சங்மா 31 சத வாக்குகளைப் பெற்றார்.
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியான மாநிலங்களவைச் செயலர் வி.கே. அக்னிஹோத்ரி, பிரணாப் முகர்ஜியின் வெற்றியை முறைப்படி அறிவித்தார்.
நாடாளுமன்றம் மற்றும் மாநிலங்களின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில், மொத்தம் 4659 வாக்குகள் பதிவாயின. அவற்றில் செல்லுபடியான 4,578 வாக்குகளின் மதிப்பு 10 லட்சத்து 29 ஆயிரத்து 750 என கணக்கிடப்பட்டது. அதன்படி, பிரணாப் முகர்ஜிக்குக் கிடைத்த வாக்குகள் ஏழு லட்சத்து 13 ஆயிரம் என கணிக்கப்பட்டது. பி.ஏ. சங்மாவுக்குக் கிடைத்த வாக்குகள் 3 லட்சத்து 15 ஆயிரம் என கணிக்கப்பட்டது.
செல்லாத வாக்குகளின் மதிப்பு 18 ஆயிரத்து 221 என கணிக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது. முதலில், எம்.பி.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டு, பின்னர் அகரவரிசைப்படி, மாநில வாரியாக எம்.எல்.ஏ.க்களின் வாக்குகள் எண்ணப்பட்டன. எம்.பி.க்களைப் பொருத்தவரை, மொத்தமுள்ள 748 வாக்குகளில், பிரணாபுக்கு 527 வாக்குகள் கிடைத்தன. சங்மாவுக்கு 206 வாக்குகள் கிடைத்தன.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் சங்மா களம் இறங்கினார்

ஆளும் கூட்டணியில் உள்ளவர்கள் கூட தனக்கு வாக்களிக்க வாய்ப்பிருப்பதாக சங்மா அவர்கள் கூறிவந்த நிலையில், இன்றைய முடிவுகள் அதற்கு எதிர்மாறாக இருந்தன.
கர்நாடகத்தில், சங்மாவுக்குக் கிடைக்க வேண்டிய பாஜக வாக்குகளில் சில பிரணாப் முகர்ஜிக்குக் கிடைத்திருக்கின்றன. இது பாஜக தலைவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாலையில் முடிவுகள் வெளியான நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் மற்றும் பல்வேறு தலைவர்கள் பிரணாப் முகர்ஜியின் இல்லத்துக்குச் சென்று வாழ்த்துத் தெரிவித்தார்கள்.
பிரணாப் முகர்ஜிக்கு, ஆளும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் மட்டுமன்றி, எதிர்க்கட்சி அணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம், சிவசேனை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும் ஆதரவளித்தன.
சங்மாவுக்கு அதிமுக, பாஜக, பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவளித்தன. தேமுதிக, தெலுங்கு தேசம், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட சில கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன.
தேர்தலில் தோல்வியைடந்த பி.ஏ. சங்மா, பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்துத் தெரிவித்தார். அதேநேரத்தில், பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை நாடு இழந்துவிட்டதாக அவர் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைவர்

இன்னும் 2 இரண்டுகளில் நடைபெறும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கடும் சவால்களை சந்திக்கும்
'இன்னும் 2 இரண்டுகளில் நடைபெறும் பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கடும் சவால்களை சந்திக்கும்': அவதானிகள்

நிதியமைச்சராக இருந்த காலத்தில் அவரது செயற்திறன் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும் பிரணாப் முகர்ஜி, ஆளும் காங்கிரஸ் கூட்டணியில் மிக அனுபவமும் செல்வாக்கும் மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்துவந்துள்ளார்.
76 வயதான முகர்ஜி, 40 ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியால் மீண்டும் தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் ஆட்சியமைக்கக் கூடிய விதத்தில் பெரும்பான்மை பலத்தை பெறமுடியுமா என்ற கேள்விகள் இருப்பதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஊழல் குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கூட்டணி அரசாங்கம் அண்மைக் காலமாக கடுமையான பிரச்சனைகளை சந்தித்துவருகின்றது.
இந்த நிலையில், அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சியாலும் பெரும்பான்மைப் பலத்தை பெற்றுக்கொள்ள முடியாமல் போனால், யார் ஆட்சியமைப்பது என்பதை தீர்மானிப்பதில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரதீபா படீலின் பதவிக்காலம் ஜூலை 24ம் திகதியுடன் முடிவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசியலில் குடியரசுத் தலைவர் பதவி என்பது பெரும்பாலும் பெயரளவு தலைமைப் பொறுப்புதான் என்றாலும், சில முக்கிய சந்தர்ப்பங்களில் குடியரசு தலைவர் தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட காங்கிரஸ் எதிர்ப்பு கட்சிகளின் ஆதரவுடன் சங்மா தேர்தலில் களம் இறங்கினார்

Thursday, July 19, 2012

பிரதமர் பதவியை நெருங்குகிறார் ராகுல் ; ‘ உரிய நேரத்தில் வருவேன் ’-என்கிறார்

புதுடில்லி: கட்சியும், அரசாங்கமும் கெட்டப்பெயரை சுமந்து அல்லல்படும் இந்நேரத்தில் ராகுலை உயரிய பொறுப்புக்கு கொண்டு வர காங்., திட்டமிட்டுள்ளது. இதன்படி உயர் பொறுப்புக்கு வரும் முடிவை எடுத்து விட்டேன் என்றும், உரிய நேரத்தில் காங்., கட்சி தலைமை முடிவை எடுக்கும் என்றும் இன்றயை பேட்டியில் ராகுல் சுருக்கென 2 வரி பதிலில் தெரிவித்தார்.

ஊழல், விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி என்ற பல பிரச்னைகளால் பிரதமர் பெயர் பெருமளவுக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்., கட்சியில் மாற்றம் வருமா ? பிரதமர் பதவிக்கு புதிய முகம் அமர்த்தப்படுமாக என்ற பேச்சு தற்போது எழுந்திருக்கிறது. இதனையடுத்து ராகுல் நோக்கி அரசியல் பார்வை திரும்பியுள்ளது. மேலும் ராகுலை உயரிய பொறுப்புக்கு கொண்டு வர வேண்டும் என காங்., மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். 

இந்நிலையில் இன்று ராகுல் அளித்த பேட்டியில்; நான் எதிர்காலத்தை திட்டமிட்டு விட்டேன். அரசிலோ அல்லது கட்சியிலோ உயர் பொறுப்புக்கு வருவது குறித்தும் முடிவு எடுத்து விட்டேன். இருப்பினும் என்ன மாதிரியான பொறுப்பு என்பதை காங்., மூத்த தலைவர்கள் சரியான நேரத்தில் முடிவு எடுப்பார்கள். இவ்வாறு ராகுல் தெரிவித்தார். 

ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் மாற்றம் இருக்கும் என டில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Wednesday, July 18, 2012

மம்தாபானர்ஜி ஆதரிப்பதால் பிரணாப் முகர்ஜிக்கு 7 லட்சம் ஓட்டு கிடைக்கும்

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரணாப் முகர்ஜியும், பாரதீய ஜனதா கூட்டணி வேட்பாளராக பி.ஏ.சங்மாவும் போட்டியிடுகிறார்கள். பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்கின்றன. 

காங்கிரசுக்கு அடுத்தப்படியாக அந்த கூட்டணியில் உள்ள 2-வது பெரிய கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் நேற்று தனது சஸ்பென்சை உடைத்து பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பதாக தெரிவித்து உள்ளது. இது தவிர மத்திய அரசை வெளியில் இருந்து ஆதரிக்கும் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன. 

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் ஆதரவு கொடுக்கிறது. தேசிய ஜன நாயக கூட்டணியைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன. பிரணாப் முகர்ஜி வெற்றி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில் கடைசி நேரத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆதரவு அளித்திருப்பதன் மூலம் அவருக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும். 

ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 776 எம்.பி.க்களும், 4120 எம்.எல்.ஏ.க்களும் ஓட்டுப் போடுகிறார்கள். மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகள் மதிப்பிடப்படுகின்றன. அதன்படி மொத்தம் எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,49,408 ஆகும். 

அனைத்து மாநில எம்.எல்.ஏ.க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 5,49,474 ஆகும். இரண்டையும் சேர்த்தால் ஜனாதிபதி தேர்தலில் பதிவாகும் மொத்த ஓட்டுக்களின் மதிப்பு 10,98,882, இதில் பிரணாப் முகர்ஜிக்கு வெற்றிக்கு 5,49,442 ஓட்டுகள் தேவை. ஆனால் பிரணாப் முகர்ஜி இதைவிட கூடுதல் ஓட்டுகள் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். 

திரிணாமூல் காங்கிரசும் ஆதரிப்பதால் சுமார் 7 லட்சம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெறுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவருக்கு மொத்தம் 52.9 சதவீகித ஓட்டுகள் கிடைக்கும். அதே சமயம் பி.ஏ. சங் மாவை பாரதீய ஜனதா, அ.தி.மு.க., பிஜு ஜனதா தளம், அகாலி தளம் உள்ளிட்ட கட்சிகள் மட்டும் ஆதரிப்பதால் அவருக்கு 3,04,785 ஓட்டுகள் கிடைக்கும். இது 34 சதவீத ஓட்டுகள் ஆகும். தேர்தலை புறக்கணிக்கும் கட்சிகள், முடிவு அறிவிக்காத சிறிய கட்சிகளிடம் 13 சதவித ஓட்டுகள் உள்ளன.

தக்க சமயத்தில் காங்கிரஸ் தலைவர் ஆவார் ராகுல்: திக்விஜய்சிங் பேட்டி

காங்கிரஸ் கட்சியின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என அக்கட்சியில் பேசப்பட்டு வரும் நிலையில், கட்சியின் தலைவராக அவர் உரிய நேரத்தில் பதவி ஏற்பார் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் திக் விஜய்சிங் கூறியுள்ளார். 

2014ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி பிரதமர் வேட்ப்பாளராக நிறுத்தப்படுவார் என்று கட்சியில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது. 

அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என முன்னிலைப்படுத்தி பேசப்பட்டு வருவது காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு உதவுமா திக்விஜய் சிங்கிடம் நிருபர்கள் கேட்டனர். 

இதற்குப் பதிலளித்த திக்விஜய் சிங்,  ‘சரியான நேரத்தில் கட்சியின் தலைமை ஏற்கவும், சிறப்பாக செயல்படவும் தகுதியும் திறமையும் உள்ளவர் ராகுல் காந்தி என முழுமையாக நான் நம்புகிறேன். ஆனால் இவ்விசயம் குறித்து கட்சியின் தலைவர்தான் முடிவெடுக்கவேண்டும். அதைப்பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. 

2014 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது சோனியா காந்தியே தலைமை ஏற்று செயல்படுவார். எங்கள் குழுவில் செயல்பட்டு வரும் ஒரு முக்கிய நபராக ராகுல் காந்தி உள்ளார். அடுத்த தலைவர் ஆவதில் சந்தேகம் இல்லை. 

அவர் தலைவராக பதவியேற்பது மட்டுமல்ல, அதற்கும் மேல் இன்னும் அதிகம் செயல்பட வேண்டும். கட்சியில் மாணவ மற்றும் இளைஞர் காங்கிரசில் செயல்பட்டு வரும் அவர், காங்கிரசில் முக்கிய பொறுப்புக்கு வரவேண்டும் என்பது பெரும்பான்மையோரின் விருப்பம்’ என்று கூறினார்.

Monday, July 16, 2012

சி.சு.வும், ப.சி.யும் ஒண்ணுதான்... ஈவிகேஎஸ் இளங்கோவன் கிண்டல்!

சென்னை: காங்கிரஸ் கட்சியில், காமராஜர் காலத்திலிருந்தே கோஷ்டிப் பூசல் இருந்து கொண்டுதான் உள்ளது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சி.சுப்பிரமணியமும், பக்தவச்சலமும் தனி கோஷ்டிகளாகத்தான செயல்பட்டனர். சி.சு.வுக்கு தொண்டர்கள் செல்வாக்கு இல்லை, இப்போது இருக்கும் ப.சிதம்பரத்திற்கும் அதேபோல தொண்டர்கள் ஆதரவு கிடையாது என்று பேசியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
காமராஜர் ஆட்சி தேவை என்று ஒரே குரலில் பேசாமல் ஆளாளுக்கு ஒரு குரலில் பேசி வரும் காங்கிரஸார் நேற்று சத்தியமூர்த்தி பவனில் காமராஜர் பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது காங்கிரஸ் கட்சியில் நிலவும் கோஷ்டிப் பூசல் குறித்து சிறப்புரை ஆற்றினார் இளங்கோவன்.
அப்போது அவர் பேசுகையில்,
கோஷ்டி வைத்து அரசியல் நடத்துவதற்கு தகுதியும், திறமையும் வேண்டும். ராஜாஜி, சத்தியமூர்த்தி காலத்திலிருந்து கோஷ்டி அரசியல் இருக்கிறது. ஆனால் அப்போது, அந்த கோஷ்டி அரசியல் கட்சியின் வளர்ச்சியைப் பாதிக்கவில்லை.
காமராஜர் இருக்கும்போதும் கோஷ்டி அரசியல் இருந்தது. பக்தகவச்சலம் ஒரு கோஷ்டியாக இருந்தார், சி.சுப்பிரமணியம் இன்னொரு கோஷ்டியாகச் செயல்பட்டார். இப்போது இருக்கும் உள்துறை அமைச்சரைப்போல சி.சுப்பிரமணியமும் மத்திய அரசில் அப்போது முக்கியமானவராக இருந்தார். ஆனால், தொண்டர்களிடம் அவருக்கு இவரைப் போலவே மரியாதை இருக்கவில்லை. அதிகாரிகள் மத்தியில் நல்ல மரியாதை இருந்தது.
ஆனால் சி.சுப்பிரமணியத்தையும், பக்தவத்சலத்தையும் காமராஜருடன் ஒப்பிட முடியுமா? அவர் மக்கள் தலைவர். இவர்கள் வெறும் அரசியல் தலைவர்கள், அவ்வளவே...
கடந்த வாரம் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். வடசென்னைக்கு வருகை தரும் தலைவா வருக, வருக என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் வடசென்னையில் எங்கே விழா நடக்கிறது என்று சொல்லவில்லை. என்ன விழா என்றும் அறிவிக்கவில்லை. காது குத்து விழாவா, வயதுக்கு வந்த விழாவா, கல்யாணமா என சொல்லச் வேண்டாமா? போஸ்டர்கள் அடிப்பதாலும், பேனர்கள் வைப்பதாலும், வழிநெடுக ட்யூப்லைட் போடுவதாலும் பெரிய தலைவர்களாகிவிட முடியாது என்பது சிலருக்குப் புரிவதில்லை.
ஜெயந்தி நடராஜனுக்கு குட்டு
காங்கிரஸில் சிலர், தொணடர்கள் பலம் இருப்பதுபோல பூச்சாண்டி காட்டுகிறார்கள். அதைக் கண்டு பயப்படாதீர்கள். காங்கிரஸில் பல்வேறு கோஷ்டிகள் இருந்தாலும் பெண்மணிகள் எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றனர். அவர்கள் எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார்கள். புகைப்படங்களில் தலையைக் காட்டுவதற்காக அல்லிராணியாக வலம் வருகின்றனர்.
அமைச்சராகிவிட்டால் தாங்கள்தான் எல்லாம் என்பதுபோல செயல்படுகின்றனர். தமிழகத்துக்கு வந்தால் தலைவர்களைச் சந்திப்பதில்லை. மகளிரணியினரைக் கூட சந்திப்பதில்லை. அதனால் எம்.எல்.ஏ.க்களும் அவர்களை சட்டை செய்வதில்லை.
திமுகவில் அண்ணன் தம்பிச் சண்டை
கோஷ்டிப் பூசல் காங்கிரஸில் மட்டுமில்லை. மற்ற கட்சிகளிலும் இருக்கிறது. ஒரு கட்சியில் அண்ணன்- தம்பி சண்டை வெளிப்படையாக நடக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியில் ஜாதிப் பூசல்
ஒரு பொதுவுடைமைக் கட்சியில் ஜாதிப் பூசல் இருக்கிறது. ஒரு ஜாதிக் கட்சியில் குரு, சிஷ்யன் சண்டை. எனவே காங்கிரஸ் கட்சியின் கோஷ்டிப் பூசல் பற்றிப் பேச இவர்களுக்கு தகுதியில்லை.
காமராஜரைக் கேலி பேசியவர்கள், மோசமாக ஆட்சி செய்கிறார்கள். முதல்வர் கொடநாட்டிலிருந்து 18-ம் தேதி மாலையில் வருவார் என்கின்றனர். அவரோ அண்ணாசாலையில் குப்பை இருந்தால்கூட அதை அகற்ற பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். என்னால் ஆட்சி செய்ய முடியவில்லை என்று கடிதம் எழுதுங்களேன். அதற்கு உடனடியாகப் பதில் கிடைக்கும்.
திராவிடக் கட்சிகள் காலை வாரும் கட்சிகளாகத்தான் இருக்கின்றன. புதிதாக வளர்ந்து வருபவர்களும் அதே பாணியில்தான் இருக்கிறார்கள். தமிழகத்துக்கு விடிவு காலம் காங்கிரசால் மட்டுமே அமையும் என்றார் இளங்கோவன்.

பெருந்தலைவர் காமராஜர் 110 வது பிறந்தநாள் விழா

பெருந்தலைவர்  காமராஜர்  110 வது பிறந்தநாள்  விழா  
 பல்லாவரம் காங்கிரஸ் சார்பில் chromepet  போஸ்ட்  ஆபீஸ் அருகில் அமைந்துள்ள  பெருந்தலைவர் காமராஜர் சிலைஇக்கு  மலை அணுவிகபட்டது

நிகழ்சிக்கு பல்லாவரம் காங்கிரஸ் தலைவர் சி . கே மூர்த்தி  தலைமை தாங்கினார் . பெருந்தலைவர் காமராஜர் சிலைஇக்கு காமராஜர் சிலை குழு தலைவர் ஆர் .வெங்கடேஷ்  மலை அன்னுவிதார் .                                     விழாவில்  நகர மன்ட உறுப்பினர் வி .ராகவன் , முன்னாள் உறுப்பினர் எ.ரோசிமல்லிக , பி ரவி , ந.ராமசந்திரன் தியாகி.முதையபிள்ளைமுன்னாள் உறுப்பினர் எ எ முருகேசன் நகர காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்  பி ஜே ஆர்  சர்மா  உட்பட பலர் கலந்துகொண்டனர் . விழா  முடிவில் த .சத்தியன் நன்றி கூறினார் .   முன்தாக அனைவர்க்கும் இனிப்பு வழங்கப்பட்டது இனிப்புகளை எல் .சண்முகம் வழங்கினஆர் 

Tuesday, July 10, 2012

ஜனாதிபதி தேர்தலுக்கு முந்தைய இரவு பிரணாபுக்கு சோனியா விருந்து

டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 18ம் தேதி இரவு விருந்து கொடுக்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவோடு முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் பிரணாப் முகர்ஜிக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேர்தலுக்கு முந்தைய நாள் அதாவது வரும் 18ம் தேதி இரவு பிரணாப் முகர்ஜிக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விருந்து கொடுக்கிறார். காங்கிரஸ் கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்த அவரை கௌரவிக்கும் வகையில் இந்த விருந்து பிரமாண்ட முறையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நீண்ட காலமாக கட்சியில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும் பிரணாப் முகர்ஜிக்கு அவர் ஆசைபட்டது போன்று பிரதமர் பதவி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தான் காங்கிரஸ் அவரை குடியரசுத் தலைவர் வேட்பாளர் ஆக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Friday, July 6, 2012

கற்பழிப்புக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது, விஷமத்தனமானது - உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி

டெல்லி: என்மீது சுமத்தப்பட்டுள்ள கற்பழிப்புக் குற்றச்சாட்டு உண்மையற்றது, விஷமத்தனமானது, அதற்கு எந்த அடிப்படையும் இல்லை, என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. கிஷோர் சம்ரிதே. இவர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி மீது செக்ஸ் புகார் கூறி உத்தரபிரதேச மாநிலத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒரு பெண்ணையும், அவளது பெற்றோரையும் ராகுல் காந்தி சட்ட விரோதமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக அதில் அவர் கூறி இருந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வழக்கை தள்ளுபடி செய்ததோடு, கிஷோர் சம்ரிதேவுக்கு ரூ.50 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறியது. அத்துடன் கிஷோர் சம்ரிதே மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்தார். அப்பீல் மனுவில் தனது புகார் மீது உயர்நீதிமன்றம் உரிய கவனம் செலுத்தவில்லை என்றும், தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறி இருந்தார்.
அவரது அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், டி.எஸ்.தாகூர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்ததோடு இந்த வழக்கு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு ராகுல் காந்தி, உத்தரபிரதேச அரசு மற்றும் 4 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் ராகுல் காந்தியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், தன் மீது மனுதாரர் கூறியுள்ள புகார் முற்றிலும் தவறானது மட்டுமின்றி விஷமத்தனமானது, தனது புகழைக் கெடுக்கும் உள்நோக்கம் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல்காந்தி.
இத்தகைய பொய்யான குற்றச்சாட்டை வேண்டுமென்றே திட்டமிட்டு தொடர்ந்து சுமத்தி வரும் சம்ரிதே மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது மனுவில் நீதிபதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை ராணுவத்துக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பது வருத்தம் அளிக்கிறது: ஜி.கே.வாசன் பேட்டி

இலங்கை ராணுவத்துக்கு தாம்பரத்தில் பயிற்சி அளிப்பது வருத்தம் அளிக்கிறது: ஜி.கே.வாசன் பேட்டி

Tuesday, July 3, 2012

பிரதமராக அனைத்து சட்டத்தகுதிகளும் கொண்டவர் சோனியா - கலாம் பேட்டி

நொய்டா: பிரதமராக வருவதற்கு இந்திய அரசியல் சாசன சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மீண்டும் தெரிவித்தார்.
நொய்டாவில் நடைபெற்ற மருத்துவமனை செவிலியர் மாநாட்டில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமர் பதவிக்கு சட்டப்படி சோனியா காந்தி தகுதியானவர்தான் என்பது குறித்து நான் ஏற்கெனவே எனது புத்தகத்தில் எழுதியுள்ளேன். சோனியாவை இந்தியக் குடிமகள் என்று உச்ச நீதிமன்றமே அறிவித்திருக்கிறது.
சோனியாதான் பிரதமராக வேண்டுமென்று அதிக தொகுதிகளை வென்ற கட்சி கூறுமாயின், அவரைத்தான் பிரதமராக குடியரசுத் தலைவர் நியமிக்க முடியும். ஆனால், அவர் அவ்வாறு செய்யவில்லை.
மாறாக, டாக்டர் மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். இதில் எந்த சர்ச்சைக்கும் இடமில்லை. இதை அரசியலாக்குவதும் தேவையற்றது," என்றார் கலாம்.
கலாமின் இந்த தொடர் பேட்டிகள் மற்றும் சோனியா ஆதரவு கருத்துகள் மூலம், வரும் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக சோனியா முன்னிறுத்தப்படலாம் என்ற பேச்சு எழுந்துள்ளது.