Friday, October 7, 2011

திருச்சி மாநகராட்சி : காங்., மேயர் வேட்பாளர் மாற்றம்


சென்னை, அக்.6 காங்கிரஸ் சார்பில் திருச்சி மாநகராட்சி மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மாற்றப்பட்டுள்ளார்.

விஜயா சேகர் கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சி மேயர் மற்றும் வார்டு கவுன்சிலர்களுக்கான தேர்தல் 17ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 30ஆம் தேதி தொடங்கியது. வரும் 7ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம்.

திருச்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் எம்.எஸ்.ஆர்.ஜெயா போட்டியிடுகிறார். திமுக சார்பில் விஜயா ஜெயராஜ் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் சுஜாதா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று சுஜாதா மறுத்து விட்டார். தற்போது மாநகராட்சி மேயராக பதவி வகித்து வரும் அவர் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று கூறிவிட்டார்.

காங்கிரஸ் வேட்பாளர் போட்டியிட மறுத்ததால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் திருச்சி மேயர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் விஜயா சேகர் போட்டியிடுவார் என்று கட்சியின் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

பல்லாவரம் காங்கிரஸ் நகர மன்ட வேட்பாளர் ஆர் எஸ் செந்தில்குமார் பிரசாரம் தொடங்கினார்

காங்கிரஸ் நகர மன்ட பல்லாவரம் வேட்பாளர் ஆர் எஸ் செந்தில்குமார் கடந்த புதன் அன்டு பல்லாவரம் 15 வது வார்டு இல் அதன் வேட்பாளர் g சசிகலா, நகர காங்கிரஸ் தலைவர் சி கே மூர்த்தி, மூத்த தலைவர் பா கார்மேகம் , y .சீனிவாச நாய்டு , பி ஜே ஆர் சர்மா , ந மகேந்திரவரமா , செந்தில்குமார் ,மொரிஸ் , ந தீன தயாளன் , ரோசிமலிகா, ந இராமச்சந்திரன் ,ராமகிர்ஷ்ணன் .தாராகாமராஜ் , ராஜசேகர் ,குட்டி , உட்பட பலர் கலந்துகொண்டனர் . முன்தாக 15 வது வார்டு தலைவர் எ ராஜசேகர் தொடக்கவிழா ஏற்படுகளை செய்திருந்தார் .

Friday, July 15, 2011

திமுகவில் கோஷ்டிகளை ஒழிக்குமாறு கருணாநிதிக்கு 'அட்வைஸ்' செய்த நிரா ராடியா!

டெல்லி: ராசாவுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியைப் பெற்றுத் தர ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி 'லாபி' செய்ததாக, லாபிக்குப் பேர் போன நிரா ராடியா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரம் தொடர்பாக நிரா ராடியாவிடம் சிபிஐ பல முறை விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பெற்றுள்ளது. இந்த வாக்குமூல விவரத்தை தனது குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. இதில் சில விஷயங்கள் வெளியே வந்தன. பல விஷயங்கள் வெளி வரவி்ல்லை.

இந் நிலையில், நிரா ராடியாவின் வாக்குமூலம் குறித்த இதுவரை வெளிவராத தகவல்களை சிபிஐ வெளியில் கசிய விட்டுள்ளது. அதில், காங்கிரஸ் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று, அமைச்சரவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராசாவுக்கு எப்படியாவது தொலைத் தொடர்புத்துறையை பெற்றுத் தர அனில் அம்பானி மிகக் கடுமையாக முயன்றதாகவும், இதை ஏர்டெல் நிறுவன அதிபரான சுனில் மிட்டல் தன்னிடம் தெரிவித்ததாகவும் ராடியா கூறியுள்ளார்.

வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்ற பெயரில் பி.ஆர்.ஏஜென்சி நடத்தி வரும் நிரா ராடியா, தனது கார்பரேட்-அரசியல் தொடர்புகள் மூலம் யாருக்கு எந்த அமைச்சர் பதவியைத் தருவது என்பதை நிர்ணயிக்கும் அளவுக்கு அதிகாரத்துடன் திகழ்ந்தார். இதனால் யாருக்கு எந்த இலாகா கிடைக்கப் போகிறது என்பதை மூத்த பத்திரிக்கையாளர்களே ராடியாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது.

சிபிஐயிடம் ராடியா அளித்துள்ள வாக்குமூலத்தில், அனில் அம்பானியிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு ராசாவை அறிவுறுத்தியதாகவும், கனிமொழியை இன்னும் தீவிரமான அரசியலில் ஈடுபடுமாறு அட்வைஸ் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியுடனும் தொலைபேசியில் பேசியதாகவும், திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல் குறித்து (அழகிரி கோஷ்டி, மாறன் கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டி, கனிமொழி கோஷ்டி) அவருடன் பேசியதாகவும், கனிமொழிக்கு மேலும் அதிகமான முக்கியத்துவம் தருமாறு கூறியதாகவும் ராடியா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கோஷ்டிகளை ஒடுக்கினால் தான் டெல்லியில் திமுக தனது செல்வாக்கை நிலை நிறுத்த முடியும் என்று கருணாநிதியிடம் கூறியதாகவும் ராடியா தெரிவித்துள்ளார்.

பல்ல்வரம் நகர காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா !

பல்ல்வரம் நகர காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் சென்னைஎயை அடுத்த குரோமேபட ட்டேல் நடந்தது
விழாக்கு நகர காங்கிரஸ் தலைவர் சி கே முர்த்தி தலைமை தாங்கினார். விழா வில் நகரமன்ற உறுபினர்கள் எ எ முருகேசன் , எ.ரோசிமல்லிகா, வி . ராகவன் . மாவட்ட காங்கிரஸ் உறுபினர்கள் பா கார்மேகம் , ஆர் வெங்கடேஷ் என் மேகேந்திர்வமா இராமச்சந்திரன் விஜயகுமார் உபட பலர் கலந்துகொண்டனர் முன்தாக அனைவர்க்கும் இனிப்பு வழங்கப்பட்டது முடிவில் நகர செதிதடர்ப்பாளர் பி ஜே ஆர் சர்மா நன்றி கூறினார்

காமராஜர் பிறந்தநாள்: உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை

சென்னை, ஜூலை.15: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு செய்தித்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Wednesday, February 16, 2011

கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை-விஜயகாந்த்

மதுரை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

மதுரை திருமங்கலம் அருகே, காங்கேய நத்தத்தில் விஜயகாந்தின் குல தெய்வமான வீர சின்னம்மாள் கோவில் உள்ளது. அரசியலில் முக்கிய முடிவுகளை அவர் எடுக்கும் முன் இங்கு அவர் சாமி தரிசனம் செய்வது வழக்கம். நேற்று காலை விஜயகாந்த் தனது மனைவி பிரமேலதா, மகன்களுடன் கோவிலுக்கு வந்தார்.

அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனைகள் நடந்தன. தரிசனத்தை முடித்துவிட்டு மதுரை புறப்பட்ட அவரிடம் நிருபர்கள், தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும் என்று குறித்து கேட்டதற்கு, ஆண்டுக்கு ஒருமுறை குல தெய்வம் கோவிலுக்கு வருவது வழக்கம். அதற்காக தான் வந்தேன். தேர்தல் கூட்டணி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. முடிவு செய்தால் தெரியப்படுத்துவேன் என்றார்.

பின்னர் திருப்பரங்குன்றம் சென்ற அவர் மாலையில் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

மதுரையில் இருந்தபோது விஜயகாந்தை திமுக தென் மண்டல பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் சார்பில் திமுக மாவட்டச் செயலாளர் சந்தித்துப் பேசியதாகவும், விஜய்காந்தின் இந்த மதுரை பயணத்துக்கு முன்பே அவரது சகோதரியும் கணவரும் அழகிரியை சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தேமுதிக வந்தால் தான் கொஞ்சமாவது வெற்றிக்கு வாய்ப்பு என்ற நிலையில் அதிமுக உள்ள நிலையில் விஜய்காந்தை அழகிரி தரப்பில் சந்தித்து என்ன பேசினர் என்று தெரியவில்லை. இதனால் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்குமா அல்லது தனித்துப் போட்டியிடுமா என்ற கேள்விக் குழப்பம் தொடர்கிறது.

Sunday, February 6, 2011

நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரசில் இணைந்தார்

ஜி.கே.வாசன், தங்கபாலு தலைமையில் நடிகர் எஸ்.வி.சேகர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். இதற்காக டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து தனது விருப்பத்தை எற்கனவே தெரிவித்திருந்தார்.

மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. நடிகர் எஸ்.வி. சேகர். அ.தி.மு.க.வில் ஓரங்கட்டப்பட்டதால் சட்டசபையில் எந்த கட்சியையும் சாராதவராக செயல்பட்டு வந்தார். தி.மு.க., காங்கிரஸ் திட்டங்களை வரவேற்று பேசினார்.

எஸ்.வி. சேகர் இன்று காலை காங்கிரசில் சேர சத்திய மூர்த்தி பவனுக்கு வந்தார். அவருடன் மகன் அஸ்வின் வந்தார். மத்திய மந்திரி ஜி.கே. வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில் எஸ்.வி. சேகர் காங்கிரசில் இணைந்தார்.

அவரை சால்வை அணிவித்து அனைவரும் வரவேற்றனர். காங்கிரஸ் உறுப்பினர் கார்டை எஸ்.வி. சேகரிடம் ஜி.கே. வாசன் வழங்கினார். இந்த விழாவில் எஸ்.வி.சேகர் பேசுகையில்,

"பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் இங்கு உள்ளது. என்ன பேசினாலும் கட்சி தலைமை என்ன சொல்கிறதோ அதற்கு எல்லோரும் கட்டுபடுகிறார்கள். இது எனக்கு பிடித்துள்ளது. 2004-ல் புரட்சித்தலைவி என்னை அ.தி.மு.க.வில் அறிமுகப்படுத்தினார். அவரே என்னை கண்டு கொள்ளாமல் வெளியேற்றி விட்டார். அதற்காக நான் வருத்தப்படவில்லை. என்னை கடவுள் பார்த்துக் கொள்வார். நான் எப்போதும் அடுத்தவர்களுக்கு உதவியாகத்தான் இருப்பேன்.

நீங்கள் ஏன் தி.மு.க.வில் சேரவில்லை என்று சிலர் கேட்டார்கள். எனக்கு பிடித்த கட்சி காங்கிரஸ் என்பதால் சேர்ந்திருக்கிறேன். நேற்று கூட காங்கிரசில் சேரும் விஷயத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி, துணை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் நேரில் சென்று சொன்னேன். அவர்களும் வாழ்த்தினார்கள்." என்றார்.