Sunday, December 29, 2013

ஜி.கே.வாசனுக்கு 49–வது பிறந்த நாள்: சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின்–விஜயகாந்த் வாழ்த்து

ஜி.கே.வாசனுக்கு 49–வது பிறந்த நாள்: சோனியாகாந்தி, மு.க.ஸ்டாலின்–விஜயகாந்த் வாழ்த்து

மத்திய மந்திரி ஜி.கே.வாசனுக்கு இன்று 49–வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை காங்கிரசார் சிறப்பாக கொண்டாடினார்கள்.
ஜி.கே.வாசனுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, துணை ஜனாதிபதி அன்சாரி, காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், மராட்டிய முதல்–மந்திரி, பிரிதிவிராஜ் சவுகான், மேற்கு வங்காள கவர்னர் என்.கே.நாராயணன் ஆகியோர் டெலிபோனில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.
மேலும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், மு.க. அழகிரி எம்.பி., தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு, தமிழர் தேசிய கூட்டமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரும் டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தனர்.
ஜி.கே.வாசன் பிறந்த நாளையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தி அன்னதானம் வழங்கப்பட்டது. ஏழைகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
பாரிமுனை காளிகாம்பாள் கோவிலில் நடிகர் ராஜ்குமார் தலைமையில் காங்கிரசார் சிறப்பு வழிபாடு நடத்தி வெள்ளி ரதம் இழுத்தனர். இதில் மாநில பொருளாளர் கோவை.தங்கம், துணைத் தலைவர்கள் ஞானசேரகன், விடியல் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மவுண்ட் ரோடு தர்காவில் 49 கிலோ எடையுள்ள பிரமாண்ட கேக்கை தவுலத்கான் ஏற்பாட்டில் மாநில தலைவர் ஞானதேசிகன் வெட்டினார். சென்னை நந்து, செல்லப்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடபழனி முருகன் கோவிலில் முன்னாள் மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி ஏற்பாட்டில் சிறப்பு பூஜை நடத்தி தங்கத் தேர் இழுத்தனர்.
சைதாப்பேட்டை இளங்காளியம்மன் கோவிலில் இன்று காலையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. நரிக்குறவர் பள்ளி மாணவ–மாணவிகளுக்கு காலை உணவும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தி.நகர் கோதண்டபம், ஜார்ஜ், பிரபாகரன் சாந்தாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். என்.எஸ்.கே. நகரில் தினேஷ் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் மண்டல தலைவர் சுரேஷ்பாபு தொடங்கி வைத்தார்.
எம்.எம்.டி.ஏ. காலனியில் அண்ணாநகர் ராம்குமார் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடந்தது. மாநில தலைவர் ஞானதேசிகன் தொடங்கி வைத்தார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜீவன் பிரசாந்த்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வடபழனி முருகன் கோவிலில் இன்று மதியம் காமராஜ் ஏற்பாட்டில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஞானதேசிகன் தொடங்கி வைத்தார்.
தி.நகர் முத்துரங்கன் சாலையில் நாளை (29–ந்தேதி) நடைபெறும் நிகழ்ச்சியில் கோதண்டன் தலைமையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பிரியாணி விருந்து வழங்கப்படுகிறது. ஞானதேசிகன் வழங்குகிறார். நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. வசந்தகுமார், தணிகாசலம், சைதைரவி, பின்னி ராதாகிருஷ்ணன், சீனிவாசன், குணசேகரன், முருகேசன், அன்பரசன், வேலுநாயகர் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் ஜெயகலா பிரபாகர், கே.கே.நகர் நாகாத் தம்மன் கோவிலில் ஜி.கே.வாசன் பெயரில் சிறப்பு பூஜை அபிஷேகம் நடத்தி அன்னதானம் வழங்கினார். 75 பெண்களுக்கு புடவைகள், 75 முதியோர்களுக்கு வேட்டிகள் வழங்கினார்.
அருள்மிகு சிதம்பர விநாயகர் ஸ்ரீநாகாத்தம்மன் கோவில் மற்றும் வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகளை மாவட்டத் தலைவர் ராயபுரம் மனோ, ஆர்.கே.நகர் ஜெ.மாரி, கே.எம்.கந்தராஜ், மத்திய அரசு வக்கீல் ஜனார்த்தனன், ஸ்கை ஜிம் ஜெ.பாபு நடத்தி அன்னதானமும் வழங்கினர்.
வேலப்பன்சாவடியில் 500 ஏழைகளுக்கு பிரியாணி மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஐ.டி.அரசன் செய்து இருந்தார்.
அயனாவரம் கருமாரியம்மன் ஆலயத்தில் ஆர். புனிதன் தலைமையில் சிறப்பு பூஜை நடந்தது. இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் என். பத்மநாபன், வினோபாபு கலந்து கொண்டனர்.
மயிலாப்பூரில் உள்ள அரிமா சங்க ரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் ஜி.ஆர்.வெங்கடேஷ் ஏற்பாட்டில் நோயாளிகளுக்கு உதவி தொகையும், பழங்களையும் ஞானதேசிகன் வழங்கினார். இதில் பொருளாளர் கோவை தங்கம், என்.ஆர்.தனபாலன், அரிமா ஆளுனர் வெங்கடேஸ்வரன், ஜி.ஆர். வெங்கடேஷ், மோகனசுந்தரம், சீனிவாசன், ரவி பங்கேற்றனர்.
முன்னதாக கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலில் ஜி.கே.வாசன் பெயரில் ஜி.ஆர்.வெங்கடேஷ் சிறப்பு பூஜைகள் நடத்தினார்.
அசோக் நகரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் ஜி.கே.வாசன் பிறந்த நாளை யொட்டி மாநில பேச்சாளரும், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளருமான என்.பாலகிருஷ்ணன் தலைமையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. சிறப்பு விருந்தினராக ஏ.எஸ்.முன வர்பாஷா கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் மதுராந்தகம் ஒன்றிய முன்னாள் துணை சேர்மன் மேனகா பாலகிருஷ்ணன், வட்ட தலைவர் சி.சண்முகம், வட்டார தலைவர் வி.ராம் குமார், எஸ்.சிவராஜ், தாமு, தனசேகரன், ஜீவா, அன்வர்பாஷா, ரவிக்குமார், அகமதுபாஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள ஏ.ஜே.தாஸ் நற்பணி மன்றம் சார்பில் நடந்த ஜி.கே.வாசன் பிறந்த நாள் விழாவில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் மத்திய சென்னை மாவட்ட துணைத் தலைவர் ஜே.சுகுமார் தலைமை தாங்கினார். கே.விஜய் கொடி ஏற்றினார். தென்சென்னை மாவட்ட பொதுச்செயலாளர் டி.ராஜேந்திரன், வட்ட தலைவர் புதுவை ரவி, கஜேந்திரன், ஜே.பி.சுந்தரபாபு, ஆலிவுட் சண்முகம் கலந்து கொண்டனர்.
திரு.வி.க.நகர் பெத்தேல் காப்பகத்தில் காலை உணவும், பெரம்பூர் லூர்து அன்னை ஆலயத்தில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை பிஜுசாக்கோ வழங்கினார். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் பிரேம்குமார் பால்விளாத் செய்திருந்தார்.

No comments:

Post a Comment