Sunday, January 20, 2013

இந்திய மக்களுக்காகவும், கட்சிக்காகவும் போராடுவேன்: ராகுல் உரை


ஜெயப்பூர்: இந்திய மக்களுக்காவும், காங்கிரஸ் கட்சிக்காகவும் இறுதி வரை போராடுவேன் என ஜெய்ப்பூரில் நடக்கும் காங்கிரஸ் கட்சி மாநாட்டின் இறுதி நாளில் துணைத்தலைவர் ராகுல் பேசினார்.

ஜெய்ப்பூரில் நடக்கும் காங்கிரஸ் கட்சி மாநாட்டில் ராகுலுக்கு துணைத்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர் அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாநாட்டின் கடைசிநாளான இன்று காலை கட்சி தலைவர்சோனியா, பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் உள்ளிட்ட பல தலைவர்கள் பேசினர்.

இதன் பின்னர் இன்று மாலை காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் பேசியதாவது: எனக்கு ஆதரவு அளித்ததற்காக அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். கடந்த 8 வருடங்களில் கட்சி எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. 1947ம் வருடம் இந்தியா ஆயுதத்தால் விடுதலை பெறவில்லை. அமைதியாகவும், மக்களின் அறப்போராட்டம் மூலமாகவும் விடுதலை பெற்றது. ஆயுதம் ஏந்தாமல், வெள்ளையர்களை நாட்டை விட்டு அனுப்புவோம் என காங்கிரஸ் கூறியது. மகாத்மா காந்தி வழிவந்தவர்கள், ஜனநாயகம் தான் அரசியல் சட்டத்தின் முக்கியமானது என வலியுறுத்தினர். மதம், ஜாதி பாராமல், இந்தியர்கள் ஒவ்வொருவரும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க உள்ளனர். பசுமைப்புரட்சி விவசாயிகளின் குரலை திருப்பி கொடுத்தது. தகவல் தொழில்நுட்ப புரட்சி மக்களின் குரலை திருப்பி கொடுத்தது.

மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, பல உரிமைகளை வழங்கி ஆயிரகணக்கான மக்களின் உரிமைகளை உறுதி செய்தது. தற்போது முதல் முறையாக மக்கள் தங்கள் உரிமைகளை உறுதி செய்துள்ளனர். ஆயிரகணக்கானவர்கள், கடந்த காலங்களில் இந்திய அரசியல் அமைப்பு தடுமாறுகிறது என கூறுகின்றனர். நமது அமைப்பில் அதிகாரம் என்பது மையமாக உள்ளது. மக்களை முன்னேற்றாமல், இங்கு எதையும் மாற்ற முடியாது. தற்போது ஊழல் பெரிய பிரச்னையாக உள்ளது. அதை ஒழிப்பது பற்றி பேசுகின்றனர். பெண்களை மதிக்காதவர்கள், பெண்களின் உரிமைகள் பற்றி பேசுகின்றனர். இன்று முதல் ஒவ்வொருவருக்காகவும் பாடுபட போகிறேன். ஆம் ஆத்மியை அரசியலில் கொண்டு வர வேண்டும். இதனை நாம் மூடிய அறைகளுக்குள் இருந்து பேசுகிறோம். இளம் வயதினர் மற்றும் பொறுமையற்றவர்கள் பலர் நீண்ட குரல் கொடுக்கன்றனர். அவர்கள் அமைதியாக கவனிக்க மாடடார்கள். சிறந்த எதிர்காலத்திற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனது தந்தை ஏழைகளுக்கு 15 பைசா சென்றடைவது பற்றி பேசுவார். ஆனால் இப்போது அவர்களுக்கு 99 பைசா சென்றடைவதை உறுதி செய்துள்ளோம். ஆனால் எதிர்கட்சியினர், இதனை லஞ்சம் கொடுப்பதாக கூறுவார்கள்.

காங். பெரிய குடும்பம்
அதிகார பரவலை டில்லியிலிருந்து பஞ்சாயத்துகளுக்கு கொடுக்க வேண்டும். நான் இளைஞர்களை பார்த்த பெருமையடைகிறேன். அவர்களுக்கு உலகளவில் பல்வேறு சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைக்க நமது அமைப்புகள் பயற்சியளிக்க வேண்டும். நீங்கள் எனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளீர்கள். காங்கிரஸ் என்பது கட்சியல்ல மிகப்பெரிய குடும்பம். இது தான் உலகில் மிகப்பெரிய குடும்பம். ஒவ்வொரு இந்தியனுக்கும் அறை உள்ளது. இந்த குடும்பத்தில், உங்களின் கருத்துக்களை வைத்து மாற்றம் செய்ய வேண்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவராக இருந்த நான் தற்போது துணைத்தலைவராகியுள்ளேன்.

இன்று முதல் நான் உங்கள் அனைவருக்காக உழைக்க போகிறேன். உங்களின் குரலை கேட்பதுடன். உங்களை சமமாக நடத்துவேன் என்பதை உறுதி கூறுகிறேன். அரசியலில் கடினமாக உழைத்து மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். ஆனால் இதை மெதுவாகவும், நீண்ட காலத்திற்கும் செய்ய வேண்டும். காங்கிரஸ் மகாத்மா காந்தியின் அமைப்பு. இந்தியாவின் ஒவ்வொரு அசைவும் கொண்டுள்ளது. இதனை எதிர்கட்சியினர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். வளர்ச்சிக்கான தலைவர்களை நாம் முன்னிறுத்த வேண்டும். இன்று முதல் அடுத்த 5 ஆண்டுகளில், நாட்டை ஆளக்கூடிய 40 முதல் 50 தலைவர்களை உருவாக்க வேண்டும். இவ்வாறு ராகுல் பேசினார்.

கடும் நடவடிக்கை- மாநாட்டில் சோனியா காந்தி பேச்சு Jaipur ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 20, 1:53 PM IST





ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிந்தனை அமர்வு என்ற பெயரில் 2 நாள் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பின் நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ராகுல் காந்தி காங்கிரசின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 3-ம் நாளான இன்று காரிய கமிட்டியின் சிறப்பு கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி மற்றும் நாடு முழுவதும் இருந்து 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பிரியங்கா காந்தி அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் ராகுல்காந்தியை துணைத் தலைவராக நியமித்ததற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. கட்சியின் முக்கிய குறிக்கோள்கள் அடங்கிய 5 அம்ச தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்பிறகு சோனியா காந்தி தொடக்க உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
2 நாள் நடந்த சிந்தனை அமர்வு கூட்டத்தில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் பற்றி அலசப்பட்டது. நமது நாடு மட்டுமின்றி சர்வதேச அளவிலான முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கவும் இந்த கூட்டம் ஒரு வாய்ப்பை வழங்கியது.
நாட்டில் ஊழல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. ஊழல் நாட்டு மக்கள் அனைவரையும் பாதிக்கிறது. ஊழல் வேரோடு ஒழிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசு ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இதுபோன்ற சட்டங்களை உள்ளடக்கிய முக்கிய 5 அம்ச திட்டத்தை தொடங்கி உள்ளோம். இதன்மூலம் ஊழலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
டெல்லி கற்பழிப்பு சம்பவத்தில் பலியான மாணவி, பெண்களின் அடையாளமாக உள்ளார். பாலியல் கொடுமைக்கு பலியான அவருக்கு நீதி கிடைக்கும். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்.
பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்குவது அடிப்படை உரிமை. பெண்களுக்கு எதிரான கொடுமை களை கட்டுப்படுத்த கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். பெண்களுக்கு சமநீதி, அந்தஸ்து வழங்கப்படும். பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும். நான் தனிப்பட்ட முறையிலும் இதை வலியுறுத்துவேன்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள நேரடி மானியம் வழங்கும் திட்டத்தால் ஊழல் முற்றிலும் ஒழிந்து போகும். இதன் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்படுவார்கள்.
காங்கிரஸ் ஏன் மக்களின் சிறந்த தேர்வாக இருக்கிறது என்பதை நாம் மக்களுக்கு தெளிவாக விளக்கிச் சொல்ல வேண்டும். சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் நமக்கு உண்டு.
பிற்படுத்தப்பட்ட மக்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்காக நாம் பாடுபடுகிறோம். நாட்டின் ஒற்றுமை மற்றும் சீரிய நிலைக்கு எதிரான சக்திகளை அழிக்க நாம் போராட வேண்டும்.
நாட்டில் வறுமையை ஒழிக்க காங்கிரஸ் பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 8 1/2 ஆண்டுகளில் பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நாட்டை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறது. செயல்திறன் கொண்டதாக அரசு விளங்குகிறது.
டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் சிலிண்டர் கட்டுப்பாடு போன்ற பிரச்சினைகள், சர்வதேச சந்தை நிலவர மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டது. அதற்கான கட்டாய சூழல் உருவானது. எனவே இதற்கான சரியான காரணத்தை நாம் மக்களிடம் விளக்கி கூற வேண்டும்.
மக்களுக்கு நம் மீது ஒரு உயர்ந்த நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் உள்ளது. அதை ஒருபோதும் வீண் போக நாம் அனுமதிக்கக் கூடாது. நமக்கு ஆதரவு தரும் மக்களின் வாழ்க்கைத்தரம் தாழ்ந்து போகவிடக் கூடாது. மக்களுக்காக நாம் ஒன்றாக உழைத்தால் வரும் 2014 தேர்தலில் நாம் வெல்வது உறுதி.

ராகுல் தலைமையில் 2014-ல் வெற்றி உறுதி: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து

ராகுல் தலைமையில் 2014-ல் வெற்றி உறுதி: காங்கிரஸ் தலைவர்கள் கருத்து
ராகுல்...
 
இந்த மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்தால்தான் காங்கிரசை காப்பாற்ற முடியும்- மீண்டும் அரியணையில் காங்கிரசை அமர வைக்க முடியும் என்பது கட்சியின் அடிமட்ட தொண்டன் முதல் உயர் மட்ட தலைவர்கள் வரை அத்தனை பேரின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
 
அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப ராகுல் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். சோனியாவின் வழிகாட்டுதலும், ராகுலின் வழி நடத்துதலும் காங்கிரசை வெற்றி வாகை சூட வைக்கும் என்று காங்கிரசார் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியதாவது:-
 
கட்சி தலைமை தாமதமாக எடுத்த முடிவாக இருந்தாலும் நல்ல முடிவு. கடந்த 8 வருடங்களாக ராகுலின் செயல்பாட்டை பார்த்து வருகிறோம்.
 
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டு மக்களை ஒன்றாக இணைக்கும் சக்தி நேரு குடும்பத்துக்கு உண்டு. அந்த வழியில் இளம் தலைவராக உருவெடுத்துள்ள ராகுல் காந்தி இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்ல தகுதியானவர். கிராம மக்களின் வாழ்க்கை தரத்தை நேரில் அறிகிறார். இந்தியா முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளை நேரில் அழைத்து பேசி கட்சி தலைவர்களையும், அவர்களின் எண்ண ஓட்டங்களையும் அறிந்து அதற்கேற்ப நடவடிக்கை எடுத்து வருகிறார்.
 
அவரது உழைப்பால்தான் உத்தரபிரதேசத்தில் 20 எம்.பி. தொகுதிகளை கைப்பற்ற முடிந்தது. அவரது தலைமை கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சியது போல் அமையும். அடுத்த ஆண்டு பொது தேர்தலை சந்திக்க நல்ல ஆரம்பம் இது.
 
2020-ம் ஆண்டில் 30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 60 சதவீதத்துக்கு மேல் இருப்பார்கள். எனவே இளைஞர் சக்தியால்தான் நாட்டை மேம்படுத்த முடியும். புதிய சிந்தனை உள்ள இளைஞர்கள், புதிய இந்தியாவை காண வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் ராகுல் தலைமையை ஏற்பார்கள்.
 
வருகிற தேர்தலில் எத்தனை கட்சிகள் ஓரணியில் திரண்டாலும் ராகுல் தலைமையில் சந்திக்க முடியும். மக்கள் ஆதரவு பெருகும்.
 
முன்னாள் மத்திய மந்திரி இளங்கோவன் கூறியதாவது:-
 
ராகுல் காந்தி துணைத் தலைவர் ஆனது இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்படுகிறது என்பதை உறுதிபடுத்தி உள்ளது. ராகுல் காந்தி தனது சகாக்களை நேரடியாக தேர்வு செய்யும் சுதந்திரம் அவருக்கு வழங்கப்பட வேண்டும்.
 
புதிய இந்தியாவை படைப்போம் என்ற கோஷத்தோடு பதவி ஏற்றுள்ளார். அவரது வருகை மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தொண்டர்களுக்கு உற்சாகத்தை தரும். மக்களுக்கும் காங்கிரஸ் மீது பலமான நம்பிக்கையை கொடுக்கும்.
 
பா.ஜனதா கட்சியினர் போட்டி போட்டு எதிர்க் கிறார்கள். எங்கள் கட்சி விவகாரத்தில் தலையிட அவர்களுக்கு உரிமை இல்லை. எங்களால் எங்கள் தலைவரை அடையாளம் காட்ட முடிந்துள்ளது. அவர் களால் முடியுமா?
 
மோடியை முன்னிலை படுத்துபவர்கள் என்று கூறுகிறார்கள். அவரது மஸ்தான் வேலைகள் குஜராத்துக்கு வெளியே செல்லுபடியாகாது. குஜராத்துக்கு வெளியே அவருக்கு செல்வாக்கு இல்லை.
 
ராகுலின் வருகையால் கட்சியில் மூத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் வராது. அவர்களும் ராகுலை தலைவராக ஏற்று கொள்கிறார்கள். ராகுல் இளைஞர்களை முன் எடுத்து சென்றாலும் மூத்தவர்களின் அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் பெற்று வருகிறார்.
 
காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கோபண்ணா கூறியதாவது:-
 
128 ஆண்டு கால பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் கட்சிக்கு 42 வயது இளைஞர் துணை தலைவராக பொறுப்பேற்றுள்ளார். ஏற்கனவே கட்சியின் பொது செயலாளராக 8 ஆண்டுகள் பணியாற்றி பயிற்சி பெற்று இப்போது இந்த பதவிக்கு வந்துள்ளார்.
 
ராகுல் வருகையால் வருகிற பொது தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தவும் அமைப்பு ரீதியாக தொண்டர்களை திரட்டவும் முடியும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது. 2004 முதல் 2009 வரை ஆட்சியில் இருந்த மதவாத சக்திகள் எப்படி வீழ்த்தப்பட்டதோ அதேபோல் வருகிற தேர்தலிலும் வீழ்த்தப்படும். அதற்கான வியூகங்களை வகுக்கும் கடமை அவருக்கு உள்ளது.
 
ராஜீவ் 41 வயது இளைஞராக இருந்தபோது கட்சியின் பொது செயலாளர் பதவியை ஏற்றார். அதேபோல் ராகுலும் பதவிக்கு வந்துள்ளார். அதற்காக வாரிசு அரசியல் என்று கூற முடியாது. இந்தியாவில் வாரிசு அரசியலை உருவாக்க முடியாது. ஆனால் நேரு குடும்பத்தை நாட்டு மக்கள் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டுள்ளார்கள். வாரிசு உருவாக்கப்படவில்லை. ஜனநாயக ரீதியாக தேர்தல் மூலம் மக்களின் வாக்குகளை பெற்று மக்களின் அங்கீகாரத்துடன்தான் பதவிக்கு வர முடிகிறது.
 
நேரு மறைவுக்கு பிறகு லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். அவருக்கு பிறகுதான் இந்திரா பொறுப்புக்கு வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு ராஜீவ் காந்தி வந்தார். அவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு அரசியல் துறவறம் பூண்டார் சோனியா காந்தி.
 
நேரு குடும்பம் இல்லாத போதுதான் மாற்று கட்சிகள் ஆட்சியை பிடித்தன. சீதாராம் கேசரி தலைவராக இருந்த போது 1998-ல் வகுப்பு வாத கட்சிகள் ஆட்சியை பிடித்தன.
 
அதன் பிறகு தனது கணவரின் லட்சியத்தை நனவாக்க சோனியா அரசியலுக்கு வந்ததும் வகுப்பு வாத ஆட்சி விரட்டியடிக்கப்பட்டது. பல மாநிலங்களில் காங்கிரஸ் பலவீனமாக உள்ளது. மாநில கட்சிக்காக வேகமாக வேரூன்றி வளர்ந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த வலிமைமிக்க தலைவராக ராகுல் இருப்பார். மக்களுக்கு ராகுல் மீது நம்பிக்கை உள்ளது.