Thursday, August 23, 2012

செல்வாக்கு மிகுந்த பெண்களில் சோனியா 6வது இடம் பிடித்தார்: போர்ப்ஸ் இதழ் பட்டியல் வெளியீடு

நியூயார்க்: உலகிலேயே செல்வாக்குள்ள பெண்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 6வது இடத்தை பிடித்துள்ளார்.

அமெரிக்காவில் இருந்து வெளிவரும் 'போர்ப்ஸ்' இதழ், உலகிலேயே செல்வாக்கு, அதிகாரமுள்ள 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 7வது இடத்தை பிடித்திருந்தார். இந்த ஆண்டுக்கான பட்டியலை போர்ப்ஸ் இதழ் நேற்று வெளியிட்டது. அதல் சோனியா 6வது இடத்தை பிடித்துள்ளார். மேலும், பெப்சி தலைமை செயல் அதிகாரி இந்திரா நூயி 12வது இடத்தையும், சிஸ்கோ சிஸ்டம்ஸ் தலைவர் பத்மஸ்ரீ வாரியர் 58வது இடத்தையும், ஐசிஐசிஐ வங்கி நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார் 59வது இடத்தையும் பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார் 80வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

சோனியா பற்றி குறிப்பிடுகையில், 'காங்கிரஸ் கட்சியின் நீண்ட நாள் தலைவராக சோனியா செயல்பட்டு வருகிறார். உடல்நலக் குறைவால் அறுவை சிகிச்சை செய்த பின்பும், கட்சி மற்றும் அரசு நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுகிறார். அசாம் கலவரத்தை திறம்பட கையாண்டது உள்பட பல்வேறு பிரச்னைகளை திறம்பட சமாளிக்கிறார்' என்று கூறியுள்ளது.

செல்வாக்குள்ள பெண்களின் பட்டியலில் தொடர்ந்து 2வது ஆண்டாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவரை 'இரும்பு பெண்' என்று போர்ப்ஸ் இதழ் பாராட்டி உள்ளது. 2வது இடத்தில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்சின் மனைவி மெலிண்டா கேட்ஸ் 4வது இடத்தையும் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிஷெல் 7வது இடம் பிடித்துள்ளார்.

எம்.பி.க்களுக்கு சோனியா அறிவுரை

புதுடில்லி : நிலக்கரி சுரங்க மோசடி தொடர்பாக எதிர்கட்சிகள் பார்லிமென்ட்டை முடக்கியுள்ளன. மேலும் இவ்விவகாரத்தில் பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காங்., தலைவர் சோனியா தனது கட்சி எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதில் எதிர்கட்சிகளின் கேள்விக்கு பயப்படாமல் உடனுக்கு உடன் தக்க பதில் கொடுக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். ஊழல் தொடர்பாக காங்., மீது பா.ஜ. கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் நிலையில் சோனியா தனது எம்.பி.க்களுக்கு இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறார்.

Tuesday, August 21, 2012

  தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : சோனியாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு|- Dinakaran

  தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விவகாரம் : சோனியாவுடன் திமுக எம்.பி.க்கள் சந்திப்பு|- Dinakaran

ராஜீவ் காந்தியின் 68வது பிறந்த நாள்... நினைவு கூர்ந்த காங்கிரஸ்


டெல்லி: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 68வது பிறந்த நாளையொட்டி இன்று அவருக்கு நாடு முழுவதும் காங்கிரஸார் மலரஞ்சலி செலுத்தினர்.
ராஜீவ் காந்திக்கு இன்று 68வது பிறந்த நாளாகும். இதையொட்டி டெல்லியில் உள்ள அவரது சமாதியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், ராஜீவின் மனைவி சோனியா காந்தி, மகள் பிரியங்கா வத்ரா, அவரது கணவர் ராபர்ட் வத்ரா ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
ஏராளமான காங்கிரஸாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அதேபோல பல்வேறு தலைவர்களும் ராஜீவ் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்திலும் ஏராளமானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். சென்னை அடுத்த பல்லாவரம் நகராச்சி இக்கு உட்பட குரோம்பட்டை  தபால் 
நிலையம் அருகில் உள்ள அமரர் ராஜீவ்காந்தி முழுஉருவ சிலை கு மாலை அணிவிக்கப்பட்டது . 
நிகழ்ச்சி பல்லாவரம் நகர காங்கிரஸ் சார்பாக செயப்பட்டது 

Monday, August 13, 2012

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு 'ஆப்பு' தயாராகிறது?

டெல்லி: மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் மற்றும் மறைந்த தலைவர்களை விமர்சனம் செய்து பேசியதற்காக, உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று கேட்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு காங்கிரஸ் கட்சியின் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த ஜுலை 15ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் பேசிய முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், மறைந்த தலைவர்கள், பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம் மற்றும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் ஆகியோரை விமர்சித்துப் பேசினார்.
இது குறித்து சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் ஆகியோர் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட ஒழுங்கு நடவடிக்கை குழு, கவனத்துக்கு கொண்டு சென்றனர். இந்தக் குழுவின் தலைவராக மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணியும், செயலாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் மோதிலால் ஓராவும் உள்ளனர்.
மேலும் இதன் உறுப்பினர்களாக மத்திய அமைச்சர்கள் சுசில்குமார் ஷிண்டே, குலாம் நபி ஆசாத், மிஜோராம் முன்னாள் முதல்வர் முகுத் மித்தி ஆகியோர் உள்ளனர்.
இந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கடந்த மாதம் 17ம் தேதி கூடி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசிய பேச்சை ஆராய்ந்து அவருக்கு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.
அதில், மறைந்த தலைவர்கள் குறித்தும், மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் குறித்தும் நீங்கள் விமர்சனம் செய்து பேசிய பேச்சு பத்திரிகைகளில் வெளி வந்துள்ளது. இதற்காக, உங்கள் மீது காங்கிரஸ் கட்சி ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு உங்கள் விளக்கத்தை ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அந்த நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த இளங்கோவன் எனக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீசை பார்த்து வருத்தப்பட்டேன். நான் அது போல பேசவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
மேலும் இளங்கோவன் நேரடியாகவே டெல்லிக்கு சென்று, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க முயற்சி செய்தார். ஆனால், சோனியா காந்தி அவரை சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை.
இளங்கோவனின் விளக்கத்தை ஒழுங்கு நடவடிக்கை குழு தனது அடுத்த கூட்டத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொண்டு தனது முடிவை அறிவிக்கும்.
முதல் முறையாக...
தமிழக காங்கிரஸ் கமிட்டியை பொறுத்தமட்டில், இதுவரையில் எந்த முன்னாள் மத்திய அமைச்சருக்கும் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கும், காங்கிரஸ் கட்சியின் மேலிட ஒழுங்கு நடவடிக்கை குழு இதுபோல நோட்டீசு அனுப்பியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நோட்டீஸைப் பெற்று சாதனை படைத்துள்ள முதல் ஆள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தான்