Thursday, December 25, 2014

Monday, December 22, 2014

த.மா.கா விற்கு ஆதரவு எப்படி இருக்கும்? P J R

பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை நோக்கி, கொஞ்சம் கொஞ்சமாக இரவு முடிந்து விடியலை நோக்கி கதிரவன் கிழக்கில் உதிப்பதை போன்று தமிழகத்திலே ஜி.கே.வாசன் தலைமையிலே த.மா.கா ஆட்சியை அமைக்கின்ற காலம் பிரகாசிக்க தொடங்கிவிட்டது.
தமிழக மக்களிடையே, த.மா.கா விற்கு ஆதரவு என்பதை தாண்டி வெற்றியை நோக்கி ஜி.கே. வாசன் அவர்களின் புதிய இயக்கம், புதிய அரசியல், புதிய பாதை சென்றுகொண்டு இருக்கிறது என்பதே உண்மை


தமிழக காங்கிரஸ் கட்சியிலே பெரும்பான்மையான தலைவர்கள் இருக்கும் போது த.மா.கா விற்கு ஆதரவு எப்படி இருக்கும்?

தமிழக மக்களிடையே, த.மா.கா விற்கு ஆதரவு என்பதை தாண்டி வெற்றியை நோக்கி ஜி.கே. வாசன் அவர்களின் புதிய இயக்கம், புதிய அரசியல், புதிய பாதை சென்றுகொண்டு இருக்கிறது என்பதே உண்மை.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் அவர்கள் பிரிந்த போது அவருடன் சில தலைவர்கள்மட்டுமே வெளியேறி இருக்கிறார்கள், ஆனால் 1996 ல் மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனார் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய போது அவருடன் ப.சிதம்பரம், எஸ். ஆர். பாலசுப்ரமணியம், சோ. பாலகிருஷ்ணன்,ஜெயந்தி நடராஜன், சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ் போன்ற முன்னனி தலைவர்கள் எல்லோரும் மக்கள் தலைவர் பின்னால் வந்தார்கள் ஆனால் இப்பொழுது அப்படி பெரிய தலைவர்கள் யாரும் இப்பொழுது வரவில்லை என்கிற எண்ணம் எல்லோருடைய மத்தியிலும் எழுகிறது அல்லது எழுப்பபட்டு இருக்கிறது .
1996 ல் மக்கள் தலைவர் அவர்கள் தான் அனைவருக்கும் மூத்த தலைவர் மற்றவர்கள் எல்லோரும் அவரைவிட வயதில் அனுபவத்தில் குறைந்தவர்கள் தான், ப.சிதம்பரம் அர்களுக்கு அப்பொழுது 52 வயது,இவருக்கு வயதும், அனுபவமும் குறைவு, எஸ். ஆர். பாலசுப்ரமணியம் வயது குறைவு, சோ.பாலகிருஷ்ணன் இவருக்கும் வயது குறைவு, ஜெயந்தி நடராஜன் இவருக்கும் வயது மக்கள் தலைவரை விட அனுபவமும் குறைவு, சுதர்சனம் இவருக்கு வயது மற்றும் அனுபவமும் மக்கள் தலைவரை ஒப்பிடும் போது குறைவு, பீட்டர் அல்போன்ஸ் இவருக்கு வயது குறைவு மற்றும் மக்கள் தலைவரை ஒப்பிடும் போது அனுபவம் குறைவு.
ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ்,ஜெயந்தி நடராஜன் போன்றவர்களுக்கு வயது குறைவு என்பதுடன் இவர்களுக்கு என்று தனியாக தமிழகத்திலே ஆதரவாளர்கள் என்று அப்பொழுது கிடையாது. அப்பொழுது தான் இவர்கள் அரசியலிலே ஒரு முக்கிய இடத்திற்கு வர ஆரம்பித்தவர்கள்.
இப்படி மக்கள் தலைவரே அனைவரை விட மூத்த தலைவராக விளங்கிய காரணத்தால் அவருடன் இணக்கமாக பணியாற்றிய மற்றும் அவருடைய வழிகாட்டுதலின் படியும், அவருடன் சேர்ந்து அரசியல் பணி செய்தவர்கள் மட்டும் தான் அன்று மக்கள் தலைவர் பின்னால் வந்தார்கள் என்பது உண்மை.
மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனாருடன் இணக்கமாக இல்லாமல் தனிச்சையாக செயல்பட்ட ஈ.வே.கே.எஸ். இளங்கோவன், கே.வி. தங்கபாலு, வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி மற்றும் குமரி அனந்தன் போன்ற மூத்த தலைவர்களெல்லாம் தனிச்சையாக செயல்பட்டவர்கள் அதனால் அவர்கள் எல்லோரும் மக்கள் தலைவர் பின்னால் அப்பொழுது வரவில்லை.
அந்த 1996 ஆம் ஆண்டு மூத்த தலைவர்கள் என்று எடுத்துக் கொண்டால், ஜி.கே.மூப்பனார், வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி, குமரி ஆனந்தன் போன்றவர்கள் தான் அகில இந்திய அளவில் கொஞ்சம் செல்வாக்கோடு இருந்த இளந்தலைவர்கள் என்றால் கே.வி. தங்கபாலு, ப.சிதம்பரம் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்கள் தான்.
1996 ஆம் ஆண்டு ஜி.கே.மூப்பனார் தனியாக காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த போது அவருடன் மூத்த தலைர்களான திரு. வாழப்பாடி ராமமூர்த்தி, திண்டிவனம் ராமமூர்த்தி மற்றும் குமரி ஆனந்தன் போன்றவர்கள், இளந்தலைவர்களாக கருத்தப்பட்ட திரு.கே.வி. தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போன்றவர்களும் வரவில்லை.
அகில இந்திய அளவில் இளந்தலைவராக கருதப்பட்ட ப.சிதம்பரம் மட்டும் மக்கள் தலைவருடன் பிரிந்து வந்தார், ஜெயந்தி நடராஜன் மகிளா காங்கிரஸில் இருந்தார் மற்றும் அவர் மறைந்த பக்தவச்சலம் அவர்களுடைய பேத்தி என்ற அடிப்படையிலும் முக்கியத்துவம் இருந்தது.
மற்ற ஏனைய தலைவர்கள் எஸ். ஆர். பாலசுப்ரமணியம், சோ.பாலகிருஷணன், சுதர்சனம் மற்றும் பீட்டர் அல்போன்ஸ் போன்றவர்களெல்லாம் தமிழகத்திலே நன்கு அறியப்பட்ட தலைவர்கள் மற்றும் இவர்களுக்கு என்று தனியாக ஆதரவளார்கள் என்று கிடையாது.
இப்படி இருக்கையில் 1996 ஆம் ஆண்டு ஜி.கே. மூப்பனார் த.மா.கா வை ஆரம்பிக்கும் போது இவருடன் மூத்த தலைவர்கள் யாரும் வரவில்லை, மூத்த தலைவர்கள் எல்லோரும் காங்கிரஸ் கட்சியிலே தான் இருந்தார்கள் என்பது இங்கே தெளிவாகிறது.
ஜி.கே. மூப்பனாருடன் , இளந்த தலைவர்களான ப.சிதம்பரம், பீட்டர் அல்போன்ஸ், ஜெயந்தி நடராஜன் போன்றோர்கள் வந்தார்கள் இவர்களுடன் எஸ். ஆர். பாலசுப்ரமணியம், சோ.பாலகிருஷ்ணன் மற்றும் சுதர்சனம் ஆகியார்கள் வந்தார்கள்.
1996 ஆம் ஆண்டும் காங்கிரஸ் கட்சி கூறியது பெரும்பான்மையான தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலே தான் இருக்கிறார்கள் ஆதலால் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று இன்று கூறுவது போல்.
காங்கிரஸ் கட்சி கூறியது போல் அன்று மூத்த தலைவர்கள் வரவில்லை அதற்கு மாறாக மக்கள் தலைவருடன் குறைந்த அளவே அன்று இளந்தலைவர்கள் வந்தார்கள் ப.சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் மற்றும் பீட்டர் அல்போன்ஸ்.
மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனார் அவர்கள் அனைத்து தொண்டர்களுடனும் அன்பாக, நல்லது கெட்டது போன்றவற்றை பரிமாறிக் கொள்ளக் கூடிய தலைவர், மற்றும் எளிமையான தலைவர். ஆர்பாட்டம் இல்லாமல் அமைதியாக பண்பாக பேசகூடியவர், பழககூடியவராக இருந்தவர்.
அதே போன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து கட்சிப்பணி செய்யக் கூடிய அனைத்து மாவட்ட, நகர, வட்டார , கிராம கமிட்டியை சேர்ந்த கடைமட்ட தொண்டர்கள் அனைவரும் மக்கள் தலைவர் பின்னால் வந்தார்கள் அது தான் மக்கள் தலைவர் அவர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது.
த.மா.கா ஆரம்பிக்கப்பட்ட போது மக்கள் தலைவர் ஜி.கே.மூப்பனாருக்கு மட்டும் தான் அதிக செல்வாக்கு இருந்தது மற்ற இதர தலைவர்கள் யாருக்கும் ஆதரவாளர்கள் என்று கிடையாது. அப்படி இருந்தும் த.மா.கா 1996 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்துவந்த தொண்டர்களின் மனநிலைக்கும், மக்களின் மனநிலைக்கும் ஏற்ப அதிமுக கூட்டணியில் சேராமல் திமுக வுடன் கூட்டுச் சேர்ந்து தேர்தலை சந்தித்தார் அந்த தேர்தலில் த.மா.கா விற்கு 39 சட்ட மன்ற உறுப்பினர்கள் கிடைத்தது, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
அது போல இன்று ஜி.கே. வாசன் அவர்கள் கட்சியில் இருந்து பிரிந்த போது அவருடன் மூத்த தலைவர்கள் எஸ். ஆர். பாலசுப்ரமணியம், பீட்டர் அல்போன்ஸ்,பி.எஸ். ஞானதேசிகன் போன்றவர்களும், திரு. கோவைத் தங்கம் முன்னாள் காங்கிரஸ் பொருளாளர், திரு.விடியல் சேகர், எஸ்.கே. கார்வேந்தன், திரு. ஞனசேகரன் போன்ற பிரபலமான தலைவர்கள் மட்டுமே கூட இருக்கிறார்கள் மற்ற பிரபல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியிலே தான் இருக்கிறார்கள்.
மக்கள் தலைவர் ஜி.கே. மூப்பனாரைப் போன்ற குணமபடைத்தவர் தான் ஜி.கே.வாசன் அனைவருடனும் எளிமையாக பேசக்கூடியவர், பழககூடியவர், தொண்டர்களின் நல்லது, கெட்டது மற்றும் சுக துக்கங்களில் பங்கெடுக்க கூடிய தலைவர், எளிமையாகவும், நேர்மையாகவும் தான் 9 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அமைச்சராக இருந்த போதும் எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகமல், ஆர்பாட்டம் இல்லாமல், அமைதியான முறையில் அரசியல் நாகரிகத்தோடு மற்ற கட்சி தலைவர்களையும் மதிக்க கூடியவர், அணுக கூடியவர் மற்றும் தான் சார்ந்து இருந்த காங்கிரஸ் கட்சியில் கூட அனைத்து தலைவர்களுடன் எளிமையாக, எல்லோரையும் அரவணைத்து அனைவருக்கும் முக்கியத்துவம் தரும் வகையில் நடந்து கொண்டவர், மற்றும் எந்தவித தனிமனிதர்களையும் விமர்சனம் செய்யாமல் மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் கூட இவர் மீது மிகுந்த மரியாதையும், பாசத்தையும் வைத்து இருக்கிறார்கள், ஏனைய கட்சி தலைவர்கள் எல்லாம் ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக இருந்தாலும் இவரிடம் பண்பாக பேசுகிறார்கள் என்றால் எந்த அளவிற்கு பொது வாழ்க்கையில் எளிமையும், நேர்மையும், தூய்மையும் கடைப்பிடிக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணம்.
எப்படி மக்கள் தலைவர் மூப்பனார் அவர்களுக்கு மாவட்ட, நகர, வட்டார மற்றும் கிராம கமிட்டி நிர்வாகிகளும், மற்றும் காங்கிரஸ் கட்சியில் இருந்த லட்சகணக்கான தொண்டர்களும் ஆதரவளித்தார்களோ அதே போன்று இன்றும் ஜி.கே. வாசன் அவர்கள் தொடங்கி இருக்கும் புதிய இயக்கத்திற்கு ஆதரவு கொடுக்கிறார்கள்.
மூத்த தலைவர்கள் மட்டுமே இன்று காங்கிரஸ் கட்சியிலே இருக்கிறார்கள் அந்த மூத்த தலைவர்களிடத்திலே எந்த தொண்டர்களும் இன்று இல்லை, 1996 ல் எப்படி முத்த தலைவர்கள் தொண்டர்கள் பலமில்லாமல் பெரும்பான்மையானவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தார்களோ, அது போன்றே இன்றும் மூத்த தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இன்று மூத்த தலைவர்கள் என்று கூறக்கூடிய ப.சிதம்பரம்,ஈ.வி.கே.எஸ், இளங்கோவன், கே.வி. தங்கபாலு, ஜெயந்தி நடராஜன் போன்றவர்களுக்கு வயதாகிவிட்டது மற்றும் இவர்களுக்கு என்று தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடத்திலேயும், மக்களிடத்திலும் எந்தவித செல்வாக்கும் இல்லை, இவர்கள் அனைவரும் இன்று ஓய்வு பெற கூடிய வயதிலே இருப்பவர்கள், இவர்களால் மக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் சென்று கட்சியை பலபடுத்த முடியாது என்பது தான் உண்மை.
ஆனால் ஜி.கே.வாசன் அவர்கள் மூத்த தலைவராக மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களாலும் மதிக்கக்கூடிய தொண்டர்களை மதிக்கக் கூடிய, வயதில் இளம் தலைவராக இருக்கக்கூடியவர் என்பதால் தமிழகத்திலே காங்கிரஸ் கட்சியில் இருந்த அத்தனை கட்சி தொண்டர்களும் இவர் பின்னால் அணிவகுத்து நிற்கிறார்கள் மற்றும் தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்ப, தமிழக மக்கள் விருப்பத்திற்கு முடிவு எடுக்க கூடிய தலைவராக எல்லோராலும் அறியப்படுக்கிறார்.
அன்று ஜி.கே. மூப்பனார் தலைமையில் த.மா.கா வெற்றிப் பெற்றதை விட இன்று ஜி.கே.வாசன் அவர்களுடைய தலைமையில் ஆரம்பிக்க இருக்கும் த.மா.கா அதிக வெற்றியை பெரும் மற்றும் தமிழக மக்களின் நீண்ட கால கனவு பெருந்தலைவர் காமராஜரின் பொற்கால ஆட்சியை நோக்கி, கொஞ்சம் கொஞ்சமாக இரவு முடிந்து விடியலை நோக்கி கதிரவன் கிழக்கில் உதிப்பதை போன்று தமிழகத்திலே ஜி.கே.வாசன் தலைமையிலே த.மா.கா ஆட்சியை அமைக்கின்ற காலம் பிரகாசிக்க தொடங்கிவிட்டது என்பதே இன்றைய அரசியல் நிலவரம் தெரிவிக்கிறது.
தமிழக மக்களிடையே, த.மா.கா விற்கு ஆதரவு என்பதை தாண்டி வெற்றியை நோக்கி ஜி.கே. வாசன் அவர்களின் புதிய இயக்கம், புதிய அரசியல், புதிய பாதை சென்றுகொண்டு இருக்கிறது என்பதே உண்மை.