Monday, December 31, 2012

அதிமுக – திமுக இரண்டையும் விரட்டுவோம் – தமிழர்கள் சூளுரை


அனைவருக்கும் அன்பான வேண்டுகோள்: திமுக - அதிமுக கட்சிகளின் தனி நபர் விசுவாசம் என்கின்ற உள்ளுணர்வோடு இப் பதிவினைப் படிக்க நினைப்பவர்களுக்குப் பொருத்தமான பதிவு இது அல்ல! தயவு செய்து உங்கள் விசுவாசங்களைக் கொஞ்ச நேரம் தூரத் தள்ளி வைத்து விட்டு; மனச்சாட்சிக்கு நேர்மையான முறையில் இப் பதிவினை நீங்கள் உற்று நோக்கினால் நன்றாக இருக்கும் அல்லவா! தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்!

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தாய்த் தமிழக உறவுகளே! 
ஈழத்தின் தெருக் கோடியில் கிடக்கும் இவனுக்கு உங்கள் தாய்த் தமிழகம் மீது ஏன் இந்த அக்கறை! "இந்தப் பதிவை அழித்து விட்டு பொத்திட்டுப் போடா நிரூபன்" என்று நீங்கள் என் மீது கோபப்படலாம்! இலங்கையின் ஊடகச் சுதந்திரம் பற்றி நீங்கள் யாவரும் அறியாததல்ல! இலங்கையில் "ஆச்சி மாற்றம் வேண்டும்" என்று எங்கள் கொள்ளுப் பாட்டியைப் பார்த்து நாங்கள் கேட்கும் போது அருகே ஒரு சீருடை தரித்த கொஞ்சம் தமிழ் பேசத் தெரிந்த இராணுவ வீரன் நின்றால், "ஆட்சி மாற்றம் வேண்டும்" என நாங்கள் கூறியதாக நினைத்து எங்கள் கதையினையே முடித்து விடுவார்கள். இது பற்றி நீங்கள் அறியாதல்ல. உங்கள் ஆத்திரங்கள், கட்சி விசுவாசங்கள், பொங்கியெழும் உணர்ச்சியலைகள் என அனைத்தையும் கொஞ்சம் தூரத் தள்ளி வைத்து விட்டு இனிப் பதிவிற்குள் நுழைவோமா?
ஐயா ஆட்சியில் இருக்கும் போது செய்யும் மரண மொக்கைகளை அம்மா டீவிக்குள்ளால் பார்த்து சிரிப்பார்! அம்மா ஆட்சியில் இருக்கும் போது பண்ணும் காமெடிகளை ஐயா பார்த்து சிரிப்பார்!

எங்களின் தமிழ் மன்னர்கள், மூதாதையர்கள் தங்களின் வளமான நாட்டில் ஆட்சி செலுத்திய காலத்தில் நிதிப் பற்றாக்குறை நிலவிய பல அண்டை நாடுகளுக்குத் தம் திறை சேரியிலிருந்து பணத்தினைப் பெற்று உதவி செய்திருக்கிறார்கள். சேர, சோழ, பாண்டிய, பல்லவ மற்றும் விஜய நகர நாயக்கர்கள் காலத்தில் இலங்கை, கம்போடியா, சீனா, தாய்லாந்து, எனப் பல நாடுகளுக்குத் தம்மாலான உதவிகளை எம் மன்னர்கள் செய்திருக்கிறார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் ஆட்சியில் உள்ளோரின் வசமிருக்கும் எம் தமிழகத்தின் திறைசேரியினைப் பரிசோதித்துப் பார்த்தால் பல கோடிக் கணக்கான பணம் மாயமாக இருக்கும். மக்களிடம் ஓட்டுப் பெற்று மக்களிடம் வரி வாங்கி மக்களின் அபிவிருத்திக்கென்று ஒதுக்கப்படுகின்ற பணம் அரசியல்வாதிகளின் இரகசியச் செயற் நடவடிக்கைகளால் சூறையாடப்பட்டு அவர் தம் சுய நலத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
இன்றும் நாளையும் மாறி மாறி ஆட்சிக் கட்டிலில் வரும் திமுக கட்சியும், அதிமுக கட்சியும் பண பலத்தால் தம் கரங்களை வலுப்படுத்தி மக்கள் பணத்தினைச் சூறையாடி வெளித் தெரியாத பல இரகசிய ஊழல்கள் செய்து தம் பிள்ளைகளையும், தம் வம்சத்தினையும் மாத்திரம் வாழ வைக்கின்ற அதி உன்னதமான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றார்கள். இது நாம் அனைவரும் அறியாத ஒன்றல்ல! அப்படியானால் இந்த அரசியல்வாதிகளை நம்பி ஓட்டளித்த மக்களின் நிலமை என்பது சந்தேகமேயில்லை கேள்விக் குறிதான்! ஓட்டளித்த மக்கள் அதே நாற்றம் வீசும் தெருக்களிலும், தூசுகள் வந்து மூக்கை அடைத்து தொற்று நோயினை உருவாக்கும் சுகந்தமற்ற காற்றினையும், போதிய வசதிகள் இல்லாத போக்குவரத்தினையும், ஏன் அனைத்துத் துறைகளிலும் பின் தங்கிய வளங்களையும் தான் தம் தேவைகளுக்காக தமிழகத்தில் பெற்றுக் கொள்ள முடிகின்றது.

எங்கு பார்த்தாலும், சிபாரிசுகளும், ஊழல்களும் எம் பின்னே மலிந்திருந்து எம் சந்ததியின் வாழ்வினை சூறையாடிச் செல்கின்றது. கலைஞரையும், ஜெயாவையும் நாம் நம்பி எத்தனை நாளைக்குத் தான் அடிமைகளாக வாழ முடியும்? ஒரு எளிய உதாரணம் இற்றைக்கு 50 வருடங்களுக்கு முன்பதாக உலக வங்கியிடமிருந்து ஐம்பது மில்லியன் ரூபாக்களை நிதியாகப் பெற்ற இந்தியாவின் குஜராத் மாநிலம் இன்று உலக வங்கிக்கே இந்தத் தொகையினைப் போன்று மூன்று அல்லது நான்கு மடங்கு அளவுள்ள பெரிய தொகையினை உதவி செய்யுமளவிற்கு வளர்ச்சியடைந்து சிறப்பான நிலையில் இருக்கின்றது. ஆனால் எம் தாய்த் தமிழகத்தின் நிலமை என்ன? கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட உலகின் மிகத் தலை சிறந்த அபிவிருத்தியடைந்த - பொருளாதாரத்தில் செழிப்புற்று விளங்கும் மாநிலங்கள் வரிசையில் குஜராத் மாநிலமும் முதல் பத்து இடங்களைப் பெற்ற உலகளாவிய மாநிலங்கள் பட்டியலினுள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றது.

இன்றைக்கு ஜெயலலிதா அவர்கள் பதவியேற்று குறுகிய காலப் பகுதியானாலும் எம் தமிழகத்தில் ஏதாவது முன்னேற்றம் நடந்ததா? கலைஞரின் பெயர் எங்கெங்கே மணக்கின்றதோ, அங்கெல்லாம் தேடித் தேடி தன் கைங்கரியத்தினைக் காட்டிக் கௌரவத்தினை நிலை நாட்ட முயற்சி செய்திருக்கிறார். இதனால் என்ன பயன்? எம் முன்னே வாழ்ந்த தமிழ் மன்னர்கள் செய்த பணிகளுக்கும், இன்று ஆட்சியில் உள்ளோர்கள் செய்கின்ற பணிகளுக்கும் எவ்வளவு வேறுபாடு? ஏன் உலக நாடுகளோடு ஒப்பிடும் போது, தமிழகத்தில் இடம் பெறும் அபிவிருத்தி அல்லது முன்னேற்றப் பாதையினை நோக்கிய செயற்பாடுகள் மந்த கதியில் தானே இடம் பெறுகின்றன. அரசியலுக்கு வருகின்ற அனைவருமே நாளடைவில் மிகப் பெரும் செல்வந்தர்களாக அனைத்துத் துறைகளையும் விலை கொடுத்து வாங்குகின்றளவிற்கு வளர்ந்து விடுகின்றார்கள். ஏன் எமது தமிழ் சினிமா கூட இன்று உதய நிதி மாறன், அழகிரி எனப் பல அரசியல் ஜாம்பவான்களின் கையில் அகப்பட்டுத் தானே தன் நகர்வினை மேற் கொள்கின்றது.

இவர்கள் அனைவரும் பிறக்கும் போது செல்வத்துடனா பிறந்தார்கள்? இல்லையே! இன்னோர் விடயம் ஆசியாவின் முதல் பத்துப் பணக்காரர்கள் வரிசையில் கலைஞர், ஜெயா, உதயநிதிமாறன், தயாநிதிமாறன் ஆகியோரின் பெயர்களும் வந்து கொள்கின்றன. அவர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களின் நிலமை? அதே தெருப் புழுதியினைச் சுவாசித்து செத்தொழிவது தானே? காலங் காலமாக இப்படியான அரசியல்வாதிகள் ஆட்சி பீடமேறி தம் வாழ்வை மட்டும் செழிப்படையச் செய்து விட்டு மக்கள் பணமெங்கே என வினா எழுப்பும் போது திறைசேரியில் பல திருட்டுக் கணக்குகளை உருவாக்கி அனைத்தையும் பேலன்ஸ் பண்ணி விட்டுச் செல்கின்றார்கள். ஆனால் மக்களாகிய எமது நிலமை? சரி எம்மைப் பற்றித் தான் கவலை கொள்வதனை விடுவோம்? எம் சந்ததியின் நிலமை? எம் பிள்ளைகள் எம் வம்சங்கள் என அனைவருமே இந்த ஏமாற்று அரசியல்வாதிகளின் கீழ் வாழ்ந்து செத்தோழிவது தானா எம் அனைவரினதும் நோக்கம்?
"அம்மா ஜெயலலிதா மடிக் கணினி கொடுக்கிறா, இதனால் பிள்ளைகளின் கம்பியூட்டர் அறிவு வளர்கிறது” என்று யாராவது சொன்னால் அதனை விட முட்டாள்த்தனமான சிந்தனை உலகத்தில் கிடையாது. நாம் எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா? எம் சந்ததியின் வளமான எதிர்காலம் பற்றி? எம் நாட்டின் எம் தமிழக மாநிலத்தின் எதிர்கால முன்னேற்றம் பற்றிச் சிந்திருக்கிறோமா? கட்சிக்கு விசுவாசமாக இருப்பதும், கருத்துச் சுதந்திரம் இருந்தும் தமிழகத்தில் மௌனமாக இருந்து மூன்று வேளையும் மூக்கு முட்டச் சாப்பிட்டு விட்டு தூங்குவதையும் அன்றாடம் வேலைக்குப் போய் உழைத்து இந்த ஏமாற்று அரசியல்வாதிகளின் கீழ் வாழ்வதனையும் தவிர நாம் எம் வாழ்வில் ஏதாவது பயன்மிக்க சிந்தனைகளை நினைத்திருப்போமா? இல்லையே! ஏன் எம்மால் முடியாது?
இன்று தமிழகத்திலும், இந்தியா முழுவதிலும் நமக்கு கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு என்ன தெரியுமா? கருத்துச் சுதந்திரம் - பேச்சுச் சுதந்திரம்! ஒருவன் வன்முறையினைத் தூண்டும் வகையில் பேசினால் அவனைக் கைது செய்து காவலில் அடைக்க இந்தியாவில் சட்டம் உண்டு. (இதற்கு உதாரணமாக கடந்த வருடம் சீமான் அவர்களுக்கு நிகழ்ந்த கசப்பான அனுபவங்களை குறிப்பிடலாம்) ஆனால் ஒரு ஜனநாயக நாட்டில் தமது தலை விதியை அல்லது தம்மை ஆள்பவரைப் பற்றிய தெரிவிற்குப் பரிபூரண சுந்தந்திரம் உண்டல்லவா?

இன்று பல ஆயிரம் பதிவர்கள் இருக்கின்றோம். எம் வலைப் பூக்கள் ஊடாக தமிழகத்தின் எதிர்காலம் எப்படி அமைய வேண்டும்? எம்மையெல்லாம் ஆளுகின்ற அரசியல்வாதி எத்தகைய நோக்கில் செயற்பட வேண்டும் எனப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாதா? எம் கருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியாதா?வெறுமனே மொக்கை போடுவதற்கும் கும்மி அடிப்பதற்கும் தான் வலைப் பூ எனும் ஊடக ஆயுதம் இருக்கிறது எனும் கருத்தினைத் தூரத் தள்ளி எறிந்து விட்டு எம் நாட்டின் எதிர்காலம் பற்றிய சிந்தனையினைத் தூண்டும் வகையில் எம் வலைப் பூக்களை மாற்ற முடியாதா?

எம் தமிழக மாநிலம் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என்றால் நன்கு படித்த கல்வியறிவில் உயர்ந்த அதே நேரம் தொலை நோக்குப் பார்வையுடைய ஊழல் செய்யாத அரசியல்வாதி உருவாக வேண்டும்! இன்றைய காலத்தில் ஆட்சியில் இருப்போரைப் பற்றி நாம் எழுதி அவர்களை மாற்ற வேண்டும் என நினைத்தால் ஒரு வேளை எம் வீடுகளுக்கு ஆட்டோ வரும் என உங்கள் மனங்களில் அச்சம் நிகழலாம்! ஆனால் நாளைய எம் சந்ததிகளின் மனங்களில் ஒரு நல் வாழ்வினையும், தாய் மண்ணின் மீதான வளர்ச்சியினையும் நோக்கிய சிந்தனைகள் உருவாகும் வண்ணம் எம்மால் வலைப் பூக்கள்,சஞ்சிகைகள், ஊடகங்கள் ஊடாகப் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? எத்தனை காலம் தான் ஊழல் நிறைந்த பயனற்ற ஆட்சியின் கீழ் வாழ்ந்து தமிழக மக்களின் எதிர்காலத்தைத் தொலைப்பது? நாம் நினைத்தால் எம்மை ஆள்வதற்குப் புதிய ஒருவரைத் தெரிவு செய்யலாம் அல்லவா!

சினிமாவில் நடித்தோரும், சிறப்புரையாற்றி காலத்தினைக் கவிதை பாடி - கடிதம் எழுதி வீணடிப்போரையும் அரசியல்வாதியாக்கி மகிழ்வதனை விடுத்து எமக்கான மாற்றுத் தேவை வேண்டும் என இளைஞர்கள் அனைவரும் தமிழகம் தழுவிய ரீதியில் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? நாங்கள் தான் எம் வளமான நாட்டின் வளர்ச்சிக்குப் பங்களிக்கவில்லை என்றாலும், எம் சந்திகளாவது தம் எதிர்காலத்தில் நலமோடு நல்வாழ்வு வாழ, தமிழகத்தில் அபிவிருத்திப் புரட்சியின் கீழ் அனைத்துத் துறைகளிலும் அவர்கள் முன்னேற உதவி செய்ய முடியாதா? சிந்தியுங்கள்! உங்கள் சிறகுகளை இன்றே விரியுங்கள்!

இன்றைய விவாத மேடையினூடாக ஒரு விவகாரமான விடயத்தினைக் கையிலெடுத்திருக்கிறேன். அது தான் கலைஞரையும் ஜெயலலிதாவையும், அவர்களின் வாரிசுகளையும் காலாதி காலமாக ஆட்சியில் அமர்த்தி அழகு பார்ப்பதை விடுத்து, எம்மால் முடிந்த வரை நாட்டின் நலனுக்காய் பாடுபடும் நன்கு படித்த - தொலை நோக்குப் பார்வையுடைய அரசியல்வாதியினை உருவாக்குவதற்குப் பாடுபட முடியாதா? இன்று இல்லையென்றாலும், எம் வருங்காலச் சந்ததிகள் வாழ்வானது சிறப்படையும் வண்ணம் இந்தக் கொடூர சூறையாடும் ஆட்சியினை அகற்றி நல்லாட்சி மலரும் வண்ணம் நாம் கருத்துப் புரட்சி செய்ய முடியாதா? ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்னர் உங்கள் நாற்று வலையின் விவாத மேடை மீண்டும் உங்களுக்காய் திறந்திருக்கிறது! உங்கள் காத்திரமான கருத்துக்களை முன் வைப்பதோடு, எம் தமிழகத்தில் கருத்துப் புரட்சி செய்யும் வண்ணம் எம் வலைப் பூக்களையும் நாம் பயன்படுத்தலாம் அல்லவா?
எண்ணம் - எழுத்து: செல்வராஜா நிரூபன்!
தயவு செய்து இப் பதிவினை அனுமதியின்றி யாரும் காப்பி பேஸ்ட் செய்து உங்கள் தளங்களில் வெளியிட வேண்டாம்! 
தயவு செய்து அனைவரும் பதிவினை முழுமையாகப் படித்து விட்டுக் கருத்தினைப் பகிருங்கள். உங்கள் வருகைப் பதிவிற்காக இப் பதிவில் கருத்துரைகளைப் பகிர்ந்து மொய்க்கு மொய் தேட முயற்சிக்க வேண்டாம்! இது என் அன்பான வேண்டுகோள்! மன்னிக்கவும்!
பிற் சேர்க்கை: இப் பதிவிற்கான படங்களைத் தன் கை வண்ணத்தால் கணினி வரை கலை மூலமாக அழகுற வடிவமைத்தவர் சகோதரன் "நிகழ்வுகள்" வலைப் பதிவின் சொந்தக்காரர் "கந்தசாமி" அவர்கள்! அவருக்கு இந் நேரத்தில் என் உளமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துக்களையும் என் சார்பிலும், உங்கள் சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் புதிய வருடத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வோர் தீர்மானம் எடுப்பார்கள். ஏன் நாம் அனைவரும், நமது அரசியலில் இளைய தலைமுறையினர் வர வேண்டும் என ஓர் தீர்மானம் எடுக்க கூடாது?

Sunday, December 9, 2012

90% இந்தியர்கள் இடியட்ஸ் என்கிறார் மார்க்கண்டேய கட்ஜூ


90% இந்தியர்கள் இடியட்ஸ் என்கிறார் மார்க்கண்டேய கட்ஜூ


டெல்லி: இந்தியாவில் 90% இந்தியர்கள் இடியட்ஸ்களாக மதத்தின் பெயரால் சொல்லப்படுபவற்றை அப்படியே நம்புகிறவர்களாக இருக்கின்றனர் என்று இந்தியன் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்திருக்கிறார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய கட்ஜூ, 90% இந்தியர்கள் முட்டாள்கள்தான். அவர்களது மூலை அவர்களின் தலையில் இருப்பதே கிடையாது. அதனால்தான் உங்களை வேறு ஒருவரால் எளிதாக கையாள முடிகிறது.
ரூ2 ஆயிரத்துக்காக டெல்லியில் இனமோதலில் ஈடுபட்டவர்களும் இருக்கின்றனர். வழிபாட்டின் பெயரால் நீங்கள் ஏமாற்ரப்படுகிறீர்கள். நாட்டில் 1857-க்கு முன்பு இப்படியான மத மோதல்கள் இருந்தது இல்லை. ஆனால் தற்போது 80% இந்துக்களும் 80% இஸ்லாமியர்களும் மதவாதிகளாக இருக்கின்றனர். இது கசப்பான உண்மைதான்.
இதேபோல் இந்தி மொழி என்பது இந்துக்களுடையது. உருது மொழி என்பது முஸ்லிம்களுடையது என்ற கருத்தும். நமது முன்னோர்களும் உருது மொழி படித்தோர்தான்.. ஆனால் உங்களை எளிதாக முட்டாளாக்குகின்றனர் என்றார் அவர்