Friday, July 15, 2011

திமுகவில் கோஷ்டிகளை ஒழிக்குமாறு கருணாநிதிக்கு 'அட்வைஸ்' செய்த நிரா ராடியா!

டெல்லி: ராசாவுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் பதவியைப் பெற்றுத் தர ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி 'லாபி' செய்ததாக, லாபிக்குப் பேர் போன நிரா ராடியா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் விவகாரம் தொடர்பாக நிரா ராடியாவிடம் சிபிஐ பல முறை விசாரணை நடத்தி அவரது வாக்குமூலத்தைப் பெற்றுள்ளது. இந்த வாக்குமூல விவரத்தை தனது குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ சேர்த்துள்ளது. இதில் சில விஷயங்கள் வெளியே வந்தன. பல விஷயங்கள் வெளி வரவி்ல்லை.

இந் நிலையில், நிரா ராடியாவின் வாக்குமூலம் குறித்த இதுவரை வெளிவராத தகவல்களை சிபிஐ வெளியில் கசிய விட்டுள்ளது. அதில், காங்கிரஸ் கூட்டணி அரசு இரண்டாவது முறையாக பொறுப்பேற்று, அமைச்சரவையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ராசாவுக்கு எப்படியாவது தொலைத் தொடர்புத்துறையை பெற்றுத் தர அனில் அம்பானி மிகக் கடுமையாக முயன்றதாகவும், இதை ஏர்டெல் நிறுவன அதிபரான சுனில் மிட்டல் தன்னிடம் தெரிவித்ததாகவும் ராடியா கூறியுள்ளார்.

வைஷ்ணவி கம்யூனிகேசன்ஸ் என்ற பெயரில் பி.ஆர்.ஏஜென்சி நடத்தி வரும் நிரா ராடியா, தனது கார்பரேட்-அரசியல் தொடர்புகள் மூலம் யாருக்கு எந்த அமைச்சர் பதவியைத் தருவது என்பதை நிர்ணயிக்கும் அளவுக்கு அதிகாரத்துடன் திகழ்ந்தார். இதனால் யாருக்கு எந்த இலாகா கிடைக்கப் போகிறது என்பதை மூத்த பத்திரிக்கையாளர்களே ராடியாவிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை இருந்தது.

சிபிஐயிடம் ராடியா அளித்துள்ள வாக்குமூலத்தில், அனில் அம்பானியிடம் ஜாக்கிரதையாக இருக்குமாறு ராசாவை அறிவுறுத்தியதாகவும், கனிமொழியை இன்னும் தீவிரமான அரசியலில் ஈடுபடுமாறு அட்வைஸ் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் திமுக தலைவர் கருணாநிதியுடனும் தொலைபேசியில் பேசியதாகவும், திமுகவில் நிலவும் கோஷ்டிப் பூசல் குறித்து (அழகிரி கோஷ்டி, மாறன் கோஷ்டி, ஸ்டாலின் கோஷ்டி, கனிமொழி கோஷ்டி) அவருடன் பேசியதாகவும், கனிமொழிக்கு மேலும் அதிகமான முக்கியத்துவம் தருமாறு கூறியதாகவும் ராடியா சிபிஐயிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் கோஷ்டிகளை ஒடுக்கினால் தான் டெல்லியில் திமுக தனது செல்வாக்கை நிலை நிறுத்த முடியும் என்று கருணாநிதியிடம் கூறியதாகவும் ராடியா தெரிவித்துள்ளார்.

பல்ல்வரம் நகர காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் விழா !

பல்ல்வரம் நகர காங்கிரஸ் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் சென்னைஎயை அடுத்த குரோமேபட ட்டேல் நடந்தது
விழாக்கு நகர காங்கிரஸ் தலைவர் சி கே முர்த்தி தலைமை தாங்கினார். விழா வில் நகரமன்ற உறுபினர்கள் எ எ முருகேசன் , எ.ரோசிமல்லிகா, வி . ராகவன் . மாவட்ட காங்கிரஸ் உறுபினர்கள் பா கார்மேகம் , ஆர் வெங்கடேஷ் என் மேகேந்திர்வமா இராமச்சந்திரன் விஜயகுமார் உபட பலர் கலந்துகொண்டனர் முன்தாக அனைவர்க்கும் இனிப்பு வழங்கப்பட்டது முடிவில் நகர செதிதடர்ப்பாளர் பி ஜே ஆர் சர்மா நன்றி கூறினார்

காமராஜர் பிறந்தநாள்: உருவப்படத்துக்கு அமைச்சர்கள் மரியாதை

சென்னை, ஜூலை.15: பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு செய்தித்துறை அமைச்சர் ஜி.செந்தமிழன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.